சனி, 4 ஜூன், 2016

மதிமாறன்: கலைஞர் எதிர்ப்பாளர்கள் எல்லாருமே ஜாதியவாதிகள்தான்

ஒரே நேரத்தில் தலித் விரோதக் கட்சி, தலித் கட்சி இரண்டையும் ஒரு சேர ஆதரிக்கிற பார்ப்பன அறிவாளிகளுக்கு அடிப்படை இரண்டும் திமுக எதிர்ப்பில் இருந்தால் போதும்.
கலைஞரை ஆதரிப்பவர்களிடம் ஜாதி உணர்வு இருக்கலாம். கலைஞரை ஆதரிப்பதில் ஜாதி இல்லை. காரணம் அவர் ஜாதியில் ஆட்களே இல்லை.
ஜாதி பின்புலம் இல்லாத ஒருவர் மிகப் பெரிய தலைவராக இருக்கிற முறை கலைஞரோடு முடிவுக்கு வருகிறது.
ஆனால், கலைஞரை கடுமையாக விமர்சிக்கிற பலரிடம் ஜாதி இருக்கிறது.
என் ஜாதிக்காரருக்கு எதிராகச் சதி செய்தார். என் ஜாதிகார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. என் ஜாதிக்காரைரை பின்னுக்குத் தள்ளி அவர் சதி செய்து தலைமை பொறுப்புக்கு வந்தார்.
இப்படிப் பல வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத ‘உள்’ காரணங்கள் நிறைய இருக்கிறது.

அதனால்தான் கலைஞரை என்ன காரணத்திற்காக விமர்சிக்கிறார்களோ, அதே வேலையை அதை விட மோசமாகச் செய்கிற நபரை ஆதரிக்கிறார்கள். அல்லது அப்படிப் பட்டவரை விமர்சிக்காமல் கள்ள மவுனம் காக்கிறார்கள்.
இந்த முறை நேரடியான ஜாதி உணர்வாளர்களை விடவும் முற்போக்காகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறவர்களிடம் அதிகம் இருக்கிறது.
அதுபோலவே, ஜெயேந்திரனை கலைஞர் காப்பாற்றினாலும் ராமானுஜர் தொடர் எழுதினாலும், வைதிகப் பார்ப்பனர்கள் அவரை எதிரியாகத்தான் பார்க்கிறார்கள். அவர்கள் திமுக விற்குச் செல்லாத ஓட்டு போடக்கூடத் தயார் இல்லை.
பார்ப்பன அறிவாளிகள், முற்போக்காளர்களும்கூட கலைஞர் எதிர்ப்பை முதன்மைப் படுத்திதான் யாரையும் எதிர்ப்பதும், ஆதரிப்பதும்.
கலைஞரை யார் எதிர்க்கிறார்களோ அவர்களை ஆதரிப்பது எப்போதும் அவர்கள் செய்கிற தந்திரம்.
ஒரே நேரத்தில் தலித் விரோதக் கட்சி, தலித் கட்சி இரண்டையும் ஒரு சேர ஆதரிக்கிற பார்ப்பன அறிவாளிகளுக்கு அடிப்படை இரண்டும் திமுக எதிர்ப்பில் இருந்தால் போதும்.
ஆக, பார்ப்பனிய சிந்தனைக் கொண்டவர்கள் என்ன காரணத்திற்காகத் திமுக வை, கலைஞரை எதிர்க்கிறார்களோ அதே காரணத்திற்காகவே நான் கலைஞரை ஆதரிக்கிறேன்.
ஆக, இதுவரை நான் கலைஞருக்கு வாழ்த்துச் சொன்னதில்லை. இந்த முறை சொல்கிறேன்
‘இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்’ மதிமாறன் wordpress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக