ஞாயிறு, 5 ஜூன், 2016

நகைக் கடைக்குள் புகுந்து ரூபாய் பத்தாயிரம் பணக்கட்டுடன் தப்பிய குரங்கு


ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள நகைக் கடைக்குள் நுழைந்த ஒரு குரங்கு கடையின் கல்லாப்பெட்டியில் இருந்து பத்தாயிரம் ரூபாயை திருடிக் கொண்டு தப்பிச் சென்றது. கையில் வைத்திருந்த கொய்யாப்பழத்தை நகைக் கடைக்குள் தூக்கி வீசிய அந்த குரங்கு, அதை எடுக்க கடைக்குள் நுழைந்தது. சுமார் 20 நிமிடங்கள்வரை கடையில் உள்ள கவுண்ட்டர்களின்மீது தாவி குதித்து, சேஷ்டைகளை செய்துவிட்டு, கடைசியாக கல்லாப்பெட்டி இருக்கும் மேஜை மீது தாவியது. மேஜையின் டிராயரை திறந்து, உள்ளே இருந்த பணத்தில் இருந்து ஒரு நூறு ரூபாய் கட்டை (பத்தாயிரம் ரூபாய்) மட்டும் எடுத்துகொண்டு ஓடும் குரங்கை கடையில் இருந்த ஒரு ஊழியர் மிரட்ட முயன்றார். ஆனால், அவரிடம் பிடிபடாமல் அந்த குரங்கு அங்கிருந்து மாடிப்படி வழியே தப்பிச் சென்று விட்டது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் கல்லாப் பெட்டியை திறந்து பணக்கட்டை எடுக்கும் இந்த குரங்கை பார்த்தால், ஏற்கனவே இதற்கு யாரோ பழுகி கொடுத்திருப்பார்கள் என்று கூறுகின்றனர். nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக