ஞாயிறு, 19 ஜூன், 2016

ரிசேர்வ் வங்கி கவர்னராக தொடரமாட்டேன் ... ரகுராம் ராஜன் அறிவிப்பு

ரிசர்வ் வங்கியின் கவர்னராக 2–வது முறையாக பொறுப்பு ஏற்க மாட்டேன் என்று ரகுராம் ராஜன் அறிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன் (வயது 53), முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசால் ரிசர்வ் வங்கியின் கவர்னராக 2003–ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
இவர் 2003–2007 காலகட்டத்தில் ‘ஐ.எம்.எப்.’ என்றழைக்கப்படுகிற சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அதுமட்டுமின்றி, 2008–ம் ஆண்டு சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று முன்கூட்டியே சரியாக கணித்துக் கூறி, உலகத்தின் கவனத்தை கவர்ந்தவர் ஆவார்.
சர்ச்சை ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜனின் பதவிக்காலம் செப்டம்பர் 4–ந் தேதி நிறைவு அடைகிறது.   டுபாக்கூர்களின்  ஆட்சியில் கவர்னராக இருந்து பேரை கெடுத்துக்க மாட்டேன்?

அவர் மீண்டும் ரிசர்வ் வங்கியின் கவர்னராக அமர்த்தப்படுவாரா என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்தது.
இதற்கிடையே ரகுராம் ராஜனின் குடியுரிமை பற்றி பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி சர்ச்சையை கிளப்பினார். ‘‘அமெரிக்காவின் கிரீன் கார்டு (நிரந்தர குடியுரிமை அட்டை) வைத்துள்ள ரகுராம் ராஜன் மனதளவில் முழுமையான இந்தியர் அல்ல. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’’ என்று அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். அது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரகுராம் ராஜன் அறிவிப்பு ஆனாலும் ரகுராம் ராஜன் இந்தியர்தான், இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளார் என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்தது.
இருப்பினும் ரகுராம் ராஜன், தான் மீண்டும் ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பை ஏற்பது தொடர்பாக மவுனம் காத்து வந்தார்.
இந்த நிலையில் அவர், தான் ரிசர்வ் வங்கியின் கவர்னராக 2–வது முறையாக பொறுப்பு ஏற்கப்போவதில்லை என்று நேற்று தெளிவுபடுத்தி விட்டார். இது தொடர்பாக ரிசர்வ் வங்கியில் தன்னோடு பணியாற்றும் சகாக்களுக்கு அவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர், ‘‘அரசாங்கத்துடன் கலந்தாலோசனை நடத்திவிட்ட நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி செப்டம்பர் 4–ந் தேதி முடிகிறபோது, மீண்டும் கல்வித்துறை பணிக்கு திரும்புகிறேன் என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்’’ என குறிபிட்டுள்ளார்.
அதே நேரத்தில், ‘‘எப்போது தேவைப்பட்டாலும் நாட்டுக்காக பணியாற்ற நான் தயாராக இருப்பேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
சிகாகோ செல்வார்? ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக்காலம் முடிந்ததும் ரகுராம் ராஜன் மீண்டும் அமெரிக்கா சென்று, சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியில் சேருவார் என தகவல்கள் கூறுகின்றன. அதே பல்கலைக்கழகத்தில்தான் அவரது மனைவி ராதிகாவும் பேராசிரியையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக