திங்கள், 6 ஜூன், 2016

மதுரா கலவரத்தில் பகிரங்கமாக ஒரு புரட்சி படை செயல்பட்டு உள்ளது!

மதுரா கலவரத்தில் புரட்சி கும்பல்: அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள்< மதுரா;நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் நடந்த வன்முறை சம்பவத்தின் பின்னணியில், செயல்பட்டு வந்த, புரட்சி கும்பல், தனி ராஜ்யம் நடத்தி வந்தது பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, மதுராவில் ஜவஹர்பாக் பகுதியில், சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றும் போது, நடந்த மோதலில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் உட்பட, 29 பேர் கொல்லப்பட்டனர்;
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, இதுவரை, 368 பேர் கைதாகியுள்ளனர்.
பிரபல சாமியார்:இந்நிலையில் இம்மோதலின் பின்னணி குறித்து பல பரபரப்பு தகவல் வெளி யாகிஉள்ளன. அதன் விவரம் வருமாறு: மோதலின் பின்னணியில் இருந்து செயல்பட்டது, ராம் விருக் ஷா யாதவ் என்பவர். அம்மாநிலத்தில் பிரபல சாமியாராக இருந்த ஜெய் குருதேவின் சீடராக இவர் இருந்துள்ளார்.

ஜெய்தேவ் உயிரிழந்த பின், 'சுவதின் பாரத் விதிக் சத்யாகிரஹ்' என்ற தனி அமைப்பை துவங்கினார். சுபாஷ் சந்திரபோசின் தொண்டர் என கூறிய அவர்,
அரசு நிர்வாகத்தை ஏற்காமல் தனியாக ஒரு அரசை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா என பல மாநிலங்களில் இருந்து, ஏராளமானோரை, தன் ஆதரவாளர்களாக மாற்றினார். பின், மதுராவில் உள்ள ஜவஹர்பாக் பகுதியை, 2014ல் ஆக்கிரமித்து, அங்கு கூடாரங்கள் அமைத்து, ஆதரவாளர்களுடன் தங்கினார்.

அங்கிருந்து யாரையும் வெளியேற, ராம் யாதவ் அனுமதிக்கவில்லை. அந்த பூங்காவுக்குள் சிறிய அரசாங்கத்தையே அவர்கள் நடத்தி வந்துள்ளனர். தேவையான உணவுகளை சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர். விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கியும், கொடுமைப் படுத்தியுள்ளனர். பஞ்சாயத்து நடத்தி தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. விதிமுறைகளை ஏற்காத வர்களை, தனிமை படுத்தி சிறை வைக்கவும் செய்துள்ளனர்.
போலீஸ் நடவடிக்கை:அரசு நிலத்தை ஆக்கிரமித்து, தனி ராஜ்யம் நடத்தி வந்த இவர்களை, அங்கிருந்து அகற்றுவதற்காக, உள்ளூர் நிர்வாகமும், போலீ சாரும் தொடர்ந்து முயன்று வந்துள்ளனர். இதன் ஒருபகுதியாக, அந்த பகுதியில், தண்ணீர், காய்கறி கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவிடாமல், இரண்டு மாதங் களாக உள்ளூர் நிர்வாகம் தடுத்தது. இருந்தாலும், ராம் யாதவும் அவரது ஆதரவாளர் களும் கிடைத்ததை சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் தான், அதிரடியாக அவர்களை அங்கிருந்து வெளியேற்ற, போலீசார் முனைந்தபோது, மோதல் ஏற்பட்டுள்ளது. போலீசார் மீது துப்பாக்கிசூடு நடத்தியும், வெடி குண்டுகளை வீசியும் அந்த கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டது. இந்த மோதலில், ராம் யாதவும் உயிரிழந்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு ஆயுத பயற்சி: ஜவஹர்பாக்முழுக்க முழுக்க சட்டவிரோதமாகவே செயல்பட்டு வந்துள்ளது. அங்கு, ஒன்பது குழந்தைகள் இருந்துள்ளனர். அவர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கியுள்ளனர். பள்ளிக்கு செல்லாமல், வெளியுலக தொடர்பு இல்லாமல், அந்த குழந்தைகள் இருந்துள்ளனர்.மோதலின் போது, இந்த குழந்தைகளும் கற்களை வீசியும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட அவர்கள், சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புரட்சியை துாண்டியதாகவழக்கு:
'இந்தியாவில் தேர்தலை ஒழிக்க வேண்டும். குறைந்த விலையில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருளை வழங்க வேண்டும்' என்பது, இவர்களது கோரிக்கையாக இருந்து வந்தது. மோதலை தொடர்ந்து, கைதானவர் கள் மீது, நிலத்தை அபகரித்தது, கொலை செய்தது, அரசு எதிராக புரட்சி நடத்த துாண்டியது என, பல பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது  dinamaalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக