திங்கள், 6 ஜூன், 2016

வருமானத்திற்கு மீறி நேர்மையாக சொத்து சேர்ப்பது எப்படி? டுடோரியல் காலேஜ் விளம்பரம்..

 நீதிபதிகள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பது குற்றமாகாது என கூறியதற்கு சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்களுடைய கருத்துக்களை எழுதி வருகின்றனர்.
Ramesh Periyar feeling confused.
வருமானத்திற்கு மீறி நேர்மையாக சொத்து சேர்ப்பது எப்படி…!?
Mahendhiran Kilumathur
சட்டம் ஒரு இருட்டறை
பிரதாபன் ஜெயராமன்
ஏமாந்து போகும் குன்ஹாக்களே…
எப்போதுமே ஜெயிக்கும் குமரசாமிகளே…
Raghavendra Aara
கனம் பொருந்திய அய்யா…. என் வருமானத்தையே என்னால் சேர்க்க முடியவில்லையே… நானெல்லாம் எப்போதய்யா வருமானத்துக்கு ஏற்ற சொத்து சேர்ப்பது?

Rabeek Raja
குன்ஹாக்களும், சகாயங்களும் மிகமிகச் சரியானவர்கள் என்கிற மாயையும் நொறுக்கப்படும்போது மட்டுமே , இந்திய நீதி பரிபாலனம் எளிய மக்களான, ‘நமக்கானதன்று’ என்பதும் புரியவரும்.
உச்ச நீதிமன்றம் ஒருபோதும் ஓட்டரசியல் அரசியல் தலைமைகளைத் தண்டிக்காது.
நீதியாவது ?!மண்ணாவது?!
Saravanan Savadamuthu
[[[ஆச்சார்யாவின் வாதத்திற்குப் பின்னர் நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், “வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து சேர்ப்பது எப்படி குற்றமாகும். அது குற்றமல்ல. வருகிற வருமானம் சட்டத்திற்குப் புறம்பான வகையில் இருந்தால்தான் அது குற்றம். மேலும் இந்த சொத்துக்களை வாங்க பயன்படுத்தப்பட்ட பணம் ஜெயலலிதாவுடையது என்று நிரூபிக்க முடியுமா? அதற்கு என்ன ஆதாரம் உள்ளது…?” என்றும் நீதிபதிகள் கேட்டனர்.]]]
முடிஞ்சு போச்சு மேட்டர். இதுக்கு மேலேயும் இவனுங்களை நம்பினால் நாமதான் முட்டாள்கள்..!
எக்கேடோ கெட்டு ஒழியட்டும் இந்த நாடு.. இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாப் போகட்டும்..! படித்தவனே சூதும், வாதும் செய்தால் அது என்ன நாடு..?
வெளங்காத தேசம்..! வெங்காய தேசம் இந்தியா..!
Osai Chella
வருமானத்துக்கு மேலே சொத்து சேர்த்தா குற்றமா ? சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி ! அப்போ என்ன டேஷ்க்கு Disproportionate Asset கேஸ் போட்டு கோர்ட்டின் நேரத்தை வீணடிச்சேங்கன்னு கர்நாடகா ஆச்சார்யாவை உள்ளே தள்ளுங்க மைலார்ட் ! கணக்குலதான் ஹைகோர்ட் வீக்குன்னு நெனைச்சா . . . லாவுலயே சுப்ரீம் கோர்ட் வீக்காயிருச்சுங்கோவ் !! தப்பித்தால் தப்பில்லை !   thetimestamil.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக