புதன், 8 ஜூன், 2016

அதிமுக.,வில் மாஜிக்களின் கட்சி பதவிகள் பறிப்பு

புதிய அதிமுக நிர்வாகிகள் :
அ.தி.மு.க., அவைத்தலைவர் - மதுசூதன்
அ.தி.மு.க., பொருளாளர் - ஓ.பன்னீர்செல்வம்
அ.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலாளர் - தம்பிதுரை
அமைப்பு செயலாளர்கள் - வைத்திலிங்கம், விசாலாட்சி நெடுஞ்செழியன்
அ.தி.மு.க., தலைமை செயலாளர் - எடப்பாடி பழனிச்சாமி
அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் - தமிழ்மகன் உசேன்
சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் - ஜஸ்டின் செல்வராஜ்
ஜெயலலிதா பேரவை செயலாளர் - அமைச்சர் உதயகுமார்
தேர்தல் பிரிவு செயலாளர் - பொள்ளாச்சி ஜெயராமன்
அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் - சின்னசாமி
அ.தி.மு.க., மருத்துவ அணி செயலாளர் - டாக்டர் வேணுகோபால்

சென்னை : அதிமுக.,வில் இன்று ஒரே நாளில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பலரது கட்சி பதவிகள் மாற்றப்பட்டுள்ளன. மாஜி அமைச்சர் பலரின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. நாஞ்சில் சம்பத், நிர்மலா பெரியசாமி உள்ளிட்டோருக்கு கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.   இதனால் தமிழ்னாட்டுக்கு என்ன நன்மை. அதே டயர் தொட்டுக் கும்பிடும், அம்மா என்று கன்று போல் பிளிரும், சட்டசபையில் அம்மா எழுந்தால்/ பேசினால் மேஜை தட்டும், அதே 45% கமிஷன் அடிக்கும்..

அதிமுக கட்சி தலைமை இன்று காலை வெளியிட்டுள்ள அறிவிப்பு புதிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மாற்றம், புதிய செய்தி தொடர்பாளர்கள் நியமனம் ஆகியன இடம்பெற்றுள்ளன. அதன்படி,

புதிய அதிமுக நிர்வாகிகள் :

அ.தி.மு.க., அவைத்தலைவர் - மதுசூதன்
அ.தி.மு.க., பொருளாளர் - ஓ.பன்னீர்செல்வம்
அ.தி.மு.க., கொள்கை பரப்புச் செயலாளர் - தம்பிதுரை
அமைப்பு செயலாளர்கள் - வைத்திலிங்கம், விசாலாட்சி நெடுஞ்செழியன்
அ.தி.மு.க., தலைமை செயலாளர் - எடப்பாடி பழனிச்சாமி
அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் - தமிழ்மகன் உசேன்
சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் - ஜஸ்டின் செல்வராஜ்
ஜெயலலிதா பேரவை செயலாளர் - அமைச்சர் உதயகுமார்
தேர்தல் பிரிவு செயலாளர் - பொள்ளாச்சி ஜெயராமன்
அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் - சின்னசாமி
அ.தி.மு.க., மருத்துவ அணி செயலாளர் - டாக்டர் வேணுகோபால்

மாவட்ட செயலாளர்கள் மாற்றம் : கன்னியாக்குமரி மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அவருக்கு பதிலாக ஏ.விஜயகுமார் எம்.பி., மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த முருகையாபாண்டியன் எம்.எல்.ஏ., மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நாராயண பெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக இருந்த தர்மருக்கு பதிலாக அமைச்சர் மணிகண்டன் ராமநாதபுரம் அதிமுக மாவட்ட செயலாளராகவும், திண்டுக்கல் மாவட்ட செயலாளராக இருந்த நத்தம் விஸ்வநாதனுக்கு பதிலாக திண்டுக்கல் மேயர் மருதராஜ் மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்ட செயலாளராக தங்க தமிழ்ச் செல்வன், கரூர் மாவட்ட செயலாளராக எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ., திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளராக தூசி கே.மோகன், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக என்.ஜி.பார்த்திபன் எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளராக எஸ்.ஆறுமுகம், தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளராக வி.பி.கலைராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாஜிக்கள் பதவி பறிப்பு : தோப்பு வெங்கடாசலம், முக்கூர் சுப்ரமணியம், நத்தம் விஸ்வநாதன், தளவாய் சுந்தரம், வி.பி.சுப்பிரமணி, ரா.குமரகுரு எம்.எல்.ஏ., உள்ளிட்டோரின் கட்சி பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளன.

ஒழுங்கு நடவடிக்கை குழு, மனுக்கள் பரிசீலனை குழு, 234 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்ட தொகுதி செயலாளர் உள்ளிட்ட அமைப்புக்களும் கலைக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

புதிய செய்தி தொடர்பாளர்கள் : பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன்,ஆர்.வைத்திலிங்கம், பா.வளர்மதி, நாஞ்சில் சம்பத், கோ. சமரசம், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், வைகை செல்வன், சி.ஆர்.சரஸ்வதி, க.பாண்டியராஜன், நிர்மலா பெரியசாமி ஆகிய 11 பேர் கட்சியின் புதிய செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக