திங்கள், 6 ஜூன், 2016

மதிமாறன்: பறையர்களும் அவர்களின் தோழன்முகமது அலியும்


சென்னைக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது என்றால் அது கால்பந்தும், குத்துச் சண்டையும் தான்.
tumblr_lxyrfbi3nT1qi86kto1_500‘குத்துச் சண்டை இதெல்லாம் ஒரு விளையாட்டா.. குத்துச் சண்டை போடுறவன்… எல்லாம் ரவுடி பயலுங்க..’
இப்படிதான் ஆச்சாரமானவர்கள் மட்டுமல்ல பல ஞாநிகள் பேசியும் கேட்டிருக்கிறேன்.
தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் குத்துச் சண்டை என்ற இந்த வீர விளையாட்டில் ஈடுபட்டவர்கள், ஈடுபடுபவர்கள் பறையர், மீனவர் சமுதாய மக்கள் இன்னும் சில இஸ்லாமியர்.
இது வெறும் விளையாட்டல்ல. இதை எல்லோரும் விளையாடி விட முடியாது. கடின உழைப்புடன் தொடர்புடையது.
கால்பந்து – குத்துச் சண்டை – கபடி மூன்றையும் கடின உழைபபோடு தொடர்புடைய இதே மூன்று சமுதாய மக்கள் தான் சென்னையின் அடையாளமாக்கினார்கள்.

குறிப்பாகத் தமிழகத்தில் எந்த ஊருக்கும் இல்லாத சிறப்பை சென்னைக்குச் சேர்த்தவர்கள் பறையர்கள். மற்ற ஊர்களில் ஜல்லிக்கட்டில் மாடு பிடிப்பதை வீர விளையாட்டாகக் கொண்டாடிக் கொண்டிருந்தபோதும், ஆதிக்க ஜாதிக்கார்கள் கிரிக்கெட்டில் ஓய்வெடுத்துக கொண்டிருந்தபோதும்,
உண்மையான வீர விளையட்டான கால்பந்தையும், குத்துச் சண்டையையும் சர்வதேச தரத்தில் விளையாட முயற்சித்தவர்கள் பறையர்கள்.
தமிழகத்திற்குள் விளையாட்டில் இசையில் நவீனத்தை கொண்டு வந்தவர்கள் பறையர்களே. (மேற்கத்திய இசைக் கருவிகளான ட்ரம்பட், பேண்ட் அவர்கள்தான் அறிமுக படுத்தினார்கள். வாசித்தார்கள். வாசிக்கிறார்கள்)
மீண்டும் சொல்கிறேன் சைவம் சாப்பிடுகிற ‘சுத்தப் பத்த’மானவர்கள் மட்டுமல்ல, அசைவம் சாப்பிடுகிற ஜாதி இந்துக்களாலும் விளையாடி விட முடியாது.. ஏன்?
குத்துச் சண்டை உழைப்போடு மட்டுமல்ல, மாட்டுக்கறியோடும் தொடர்புடையது.
அதனால்தான் ஆச்சாரமான அறிவாளிகளிலிருந்து ஆட்டுக்கறி மட்டும் சாப்பிடும் அறிவாளிகள் வரை குத்துச் சண்டை வீரர்களை ‘ரவுடிகள்’ என்று அடையாளப்படுத்தினார்கள் .
‘The Greatest’முகமது அலி எவ்வளவோ நாக் – அவுட் செய்திருக்கிறார். ஆனாலும் அவர் அடித்த நாக் அவுட்டில் முத்திரையானது, இனவெறியர்களுக்கு எதிரான நாக் அவுட் தான்.
அந்த ஒரே குத்து ஏகாதிபத்திய எதிர்ப்புக் குத்தாக மட்டுமல்ல, தமிழகத்தில் குத்துச் சண்டை வீரர்களை இழிவாகப் பார்த்த ஆச்சார, ஆட்டுக்கறி அறிவாளிகள் முகத்தில் குத்திய குத்தும். அவன் தான் குத்துச் சண்டை வீரர்களுக்கு மரியாதையை ஏற்படுத்தினான்.
‘The Greatest’முகமது அலி எதிர்ப்பும், ஆதரவும் ஒரு சேர கண்டவன். குத்துச் சண்டை வீரன் என்பதால் மட்டும் எதிர்க்க வில்லை. கொண்டாடவில்லை.
அவன் கருப்பன். அதிலும் இஸ்லாமியன். இதுபோதாத ஏகாதிபத்திய வெள்ளையர்கள் அவனை வெறுப்பதற்கு.
இது போதாதா நாம் அவனைக் கொண்டாடி நேசிப்பதற்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக