செவ்வாய், 28 ஜூன், 2016

விஜயகாந்த் : எப்போதும் திமுகவுடன் கூட்டணி இல்லை... அம்மான்னா அம்மாதான்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக படுதோல்வியை சந்தித்தது. அதன் தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்ப்பேட்டையில் டெபாசிட் இழந்தார். இந்த நிலையில் தமது கட்சியின் நிர்வாகிகளை தொடர்ந்து சந்தித்து கருத்து கேட்டு வருகிறார் விஜயகாந்த்.
நேற்று ஜூன் 27 அன்று கட்சியில் உள்ள அணியின் மாவட்ட நிர்வாகிகளையும், கட்சியின் மாவட்ட துனை செயலாளர், துனை பொருளாளர், துனை தலைவர்களை அழைத்து கருத்துகளை கேட்டுள்ளார். இந்த கூட்டத்தில் என்ன நடந்தது?
தேர்தல் தோல்வியால் பல லட்சங்களை இழந்த ஓர் தேமுதிக வேட்பாளர் கூட்டத்தில் நடந்ததை விவரிக்கிறார்.‘தேர்தலால் பல லட்சங்களில் கடன் சுமை ஏறிவிட்டது. வட்டி கட்டமுடியவில்லை. மிகவும் நொடிந்து இருக்கிறோம்’ என்று பலர் தெரிவித்தனர். அதை கூர்ந்து கவனித்தவர் தொடர்ந்து அதேபோல கருத்துக்கள் வந்தபோது கோபத்தில் எழுந்து அருகில் இருந்த அறைக்கு சென்றார்.  அரசியலில் ஈடுபட்டு குறுகிய காலத்திலேயே  மிகபெரும் வெற்றியை அடைந்தவர்களில்  நடிகர் விஜகாந்து தான் முதன்மையானவர் .. கரன்சி... கரன்சி.... கரன்சி .. அள்ளிட்டார்ல?
பின் கோபம் தணிந்தபின் மீண்டும் கூட்டத்தில் இணைந்துகொண்டார். ‘திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் இந்தளவு தோல்வியடைந்திருக்க மாட்டோம். பணமும் பெரியளவில் செலவாகியிருக்காது’ என்றபோது மீண்டும் கோபமடைந்தவர் , ‘என்ன எப்போ பார்த்தாலும் திமுகவுடன் கூட்டணி வைக்காதது தவறென்றே சொல்லிக்கிட்டு இருக்கீங்க. இப்போ சொல்றேன் இனி எப்போதும்
திமுகவுடன் கூட்டணி இல்லை ‘ என்றார் விஜயகாந்த்.
விழுப்புரம் மாவட்ட நிர்வாகி ஒருவர் கருத்து சொல்ல முயன்றபோது, கோபமாக எழுந்த விஜயகாந்த் , ‘விழுப்புரம் மாவட்டத்திலிருந்து யாரும் பேசவேண்டாம் உங்களை யார் டியூன் பன்றாங்க என்று எனக்கு தெரியும்’ என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டார். மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசனை குறிபிட்டு தான் மறைமுகமாக அப்படி சொல்லியுள்ளார்,
இதுவரை ஐந்து மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. பேசசொல்கிறார், பேசினால் பயங்கரமா நோஸ் கட்பன்றார், சம்பந்தமே இல்லாமல் இனி திமுக,வுடன் கூட்டணியும் இல்லை உறவும் இல்லை என்று பேசுகிறார், அப்படியென்றால் ‘அதிமுக,வுடன் கூட்டணியா?’ என கூட்டத்தில் கின்டலாக முணுமுணுத்தனர். இதற்கிடையே மாநில பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன் எழுந்து கேப்ட்டன் கருத்தை சொன்னார், எழுந்து, ‘உள்ளாட்சி தேர்தலுக்கு தலைமையில் யாரும் ஒரு பைசாகூட எதிர்பார்ககூடாது, உங்கள் சொந்த பனத்தில்தான் செலவு செய்யவேண்டும், கட்சி தலைமையிடம் பணம் இல்லை. இது கேப்டன் விஜயகாந்தின் கருத்து’ என்றார். அப்படியென்றால் மறுபடியும் முதலில் இருந்து தொடங்குகிறார்களா? நயா பைசா இல்லாத நாங்கள் இனி எங்கிருந்து பணத்தை செலவு செய்வது?’ என்றார் நொந்தபடி. இந்த குமுறல் பலரிடமும் வெளிப்பட்டன. இந்நிலையில்
ஜூன் 28 இன்று தலைமைக்கு கடிதம் எழுதபட்டதாக சொல்லபட்ட 14 மாவட்ட செயலாளர்களையும் அழைத்து, தலைமைக்கு வந்த கடிதத்தை பற்றி தீவிரமாக விவாதித்துள்ளது தேமுதிக தலைமை. கூட்டத்தில் கலந்துக்கொண்ட மாவட்ட செயலாளர்கள் ‘நாங்கள் எழுதவில்லை. எழுதியிருந்தால் நாங்கள் உங்கள் முன்னாள் வந்து நிற்க முடியுமா?’ என்றனர் . அப்படியென்றால் ‘கடிதம் எழுதியவர் யார் என்று கண்டுபிடிக்க புகார் கொடுக்கலாம்’ என்று விஜயகாந்த் உத்தரவிட, அதன்படி ஏ.டி.ஜி.பி திரிபாதியிடம் புகார் கொடுத்துள்ளனர் தேமுதிகவினர். நாம் விஜயகாந்த் கோபம் குறித்து விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசனிடம் கேட்டோம். ‘இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துக்கொண்டேன் என்னை நேரடியாக கேட்டுருந்தால் பதில் சொல்லியிருப்பேன். என்னிடம் எதுவும் கேட்கவில்லை.மற்றபடி பேசுபவர்கள் பேசிட்டு போகட்டும் ’ என்றார் விரக்தியாக. ‘வெங்கடேசன் விரக்த்திக்கு காரனம் உண்டு, கட்சி மாநாடு, கூட்டம் என்றால் விஜயகாந்த் வெங்கடேசனிடம்தான் பொருப்பை கொடுப்பார், வெங்கடேசன் சொந்த பணத்தை எகப்பட்டளவில் கட்சிகாக செலவுசெய்துள்ளார் என்பது கட்சி கீழ்மட்டம் முதல் மேல்மட்டம்வரை தெரியும் என்கிறார், கடலூர் மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் லெனின்.minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக