செவ்வாய், 28 ஜூன், 2016

அரசினர் மருத்துவ மனையில் 18 பேரின் கண்பார்வை பறிபோனது.. மேட்டூரில் அக்கிரமம்


மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது குறித்து தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 18 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு விரைவில் கண்பார்வை திரும்பும் என்று சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள் உறுதி அளித்துள்ளனர். இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவத்துக்கு விளக்கம் கேட்டு மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வெப்துனியா.கம 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக