ஞாயிறு, 19 ஜூன், 2016

மூலிகை சிகிச்சையால் போன உயிர்!

‘இவ்வகை மருத்துவம் எந்த அளவுக்கு மக்களுக்குப் பயன்தருகிறது?’ என்பதை சென்னை ராமச்சந்திரா மருத்துவமனை சிறுநீரகத் துறையின் தலைமை மருத்துவரான டாக்டர் பி. சௌந்தரராஜன் அவர்கள் விளக்கினார். “மூலிகை மருந்துகளால் எந்த விளைவும் ஏற்படாமல் ஏமாந்த ஒரு பெண்ணின் கதையும் உண்டு” என்று ஆரம்பித்தவர் தொடர்ந்து, “அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி சில வருடங்களாகக் குழந்தை இல்லை. சோதித்துப் பார்த்ததில் சிறுநீரகம் செயலிழந்துள்ளது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். என்னிடம் அந்தப் பெண்ணை அழைத்து வந்தார்கள். டயாலிசிஸ் மற்றும் சிகிச்சைகள் செய்து கொண்டிருந்தோம்.
அந்த நேரத்தில்தான் யாரோ அவரை அடிக்கடி விளம்பரங்களில் வரும் ஒரு மருத்துவமனைக்குப் போகச் சொல்லியிருக்கிறார்கள். அவரும் எங்கள் சிகிச்சையை விட்டுவிட்டு அங்கு போய்விட்டார். திடீரென்று ஒருநாள், இரவு இரண்டு மணிக்கு ‘டாக்டரய்யா, டாக்டரய்யா’ என்று என் வீட்டுக் கதவைத் தட்டினார்கள் அந்தப் பெண்ணின் பெற்றோர். வெளியே வாடகை காரில், கோமா நிலையில் படுத்துக் கிடந்தார் அந்தப் பெண். உடனடியாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குப் போன் செய்து, டயாலிசிஸுக்கான ஏற்பாடுகளைத் தயார் செய்து வைக்கச் சொல்லிவிட்டு, நானும் அவர்களோடு போய் சிகிச்சை செய்த பிறகு, அந்தப் பெண் கோமாவிலிருந்து மீண்டு வந்தார். அவரை விசாரித்தபோது, வெளிவந்த விஷயங்களைக் கேட்டு மனதுக்கு ரொம்பவே கஷ்டமாகிவிட்டது.</>சிறுநீரகம் செயலிழந்திருந்ததால், ஸ்கேன் ரிப்போர்ட்டில் சிறுநீரகத்தின் அளவு நார்மலைவிடக் கொஞ்சம் சின்னதாகத் தெரியும். இதை மருத்துவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் நான்கு ஸ்கேன் சென்டர்களில் போய் சிறுநீரகத்தை ஸ்கேன் செய்தால், நான்கின் ரிசல்ட்டிலும் சிறுநீரகத்தின் அளவு துல்லியமாக ஒரே அளவில் இருக்காது. ஏனெனில் சிறுநீரகத்தை அப்படி ஒரே நிலையில் ஸ்கேன் செய்வது ரொம்பவும் சிரமம். இந்தத் தந்திரத்தை உபயோகித்து, அந்தப் பெண்ணுக்கு அந்த மருத்துவமனையிலேயே ஸ்கேன் செய்து, ‘பார்... சுருங்கியிருந்த உன் சிறுநீரகம் எங்கள் மருந்தால் இப்போது விரிவடைந்துவிட்டது’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதை நம்பியதன் விளைவுதான் அந்த நடுஇரவு பயங்கரம்.<>உண்மையில் அந்த மருத்துவமனயில் மருந்தாகத் தருகிற மூலிகைக்கு எந்தவொரு விசேஷமான குணப்படுத்தும் சக்தியும் கிடையாது என்பது சிறுநீரகத்துறையில் மூத்த நிபுணர் ஒருவரின் ஆராய்ச்சியில் தெளிவாகி இருக்கிறது. அதை அபூர்வ மருந்து என்று நம்பி வேறெந்த மருந்தும் எடுத்துக் கொள்ளாததால் ஏற்பட்ட பாதிப்புதான் அந்தப் பெண்ணுக்கு நேர்ந்தது.</>அந்தக் காலத்தில் சித்த மருத்துவர்கள் ஒரு மருந்தைத் தயாரிக்க ரொம்பவே மெனக்கெடுவார்கள். மூலிகைச் சாற்றை கணக்கற்ற தடவை கொதிக்க வைத்து, குளிர்ச்சியாக்கி அதிலுள்ள விஷத் தன்மைகளை நீக்கப் புடம் போட்டு, மேலும் பல மூலிகைகளைச் சரியான விகிதத்தில் கலந்து, பின்புதான் மருந்தாகத் தருவார்கள். ஆனால், இன்று அப்படியெல்லாம் யாரும் தருகிறார்களா, அதற்கான பொறுமையும் நேரமும் அவர்களுக்கு இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.</">மேலும், ஒரே மூலிகை சென்னையிலும் திருப்பூரிலும் வெவ்வேறு குணங்களுடன் இருக்க முடியும். சாயப்பட்டறை, தோல் தொழிற்சாலை போன்றவற்றின் கழிவுகளால் நிலம் கெட்டுப் போயிருக்கும். இந்த நிலத்தில் விளைகிற மூலிகை விஷத்தன்மையுடன் இருக்கும். 1990இல் வெளிவந்த ‘ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன்’ (JAMA) என்ற புத்தகத்தில், ‘இந்திய நாட்டு மருந்துகளால் காரிய விஷம் ஏறி கல்லீரல், சிறுநீரகம் மற்றும் உடம்பின் மொத்த ரத்த ஓட்டமும் பாதிக்கப்படும்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.</">இன்டர்ஸ்டீஷியல் நெஃப்ரைட்டிஸ் (Interstitial Nephritis) என்கிற சிறுநீரக செயலிழப்பு, நாட்டு மற்றும் மூலிகை மருந்துகளை உட்கொள்வதாலும் ஏற்படுகிறது என்பது அகில உலக அளவில் மருத்துவர்களால் மற்றும் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
நட்மெக் (Nutmeg) மற்றும் அகோனிட் (Aconit) என்னும் மூலிகைகளாலும், சிலவகை சீன சூப்களில் உபயோகிக்கப்படுகிற மூலிகைகளாலும் கூட சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட முடியும். இதில் நட்மெக் என்ற மூலிகை, பெரும்பாலான செக்ஸ் உணர்வூக்கி மாத்திரைகளில் உள்ளது. மேலும், ஏப்ளாஸ்டிக் அனீமியா எனப்படுகிற வெள்ளை அணுக்கள் இல்லாமல் போகிற வியாதியும் மூலிகை மற்றும் நாட்டு மருந்துகளால் வருவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே மூலிகை மருந்து சாப்பிடுகிறவர்களே... நீங்கள் கவனமாகத்தான் இருக்க வேண்டும்.</>அதற்காக, மூலிகை மருந்து உட்கொள்வதே மரணத்தை வருவிப்பதற்குச் சமம் என்று அர்த்தமில்லை. கேன்சர் உட்பட பல வியாதிகளுக்கான அலோபதி மருந்துகள் மூலிகைகளில் இருந்துதான் தயாராகின்றன. ஹெபடைடிஸ் பி வகை மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் சக்தி கீழாநெல்லிச் செடிக்கு உண்டு என்பதை உலகம் அறியப் பறைசாற்றியவர்கள் நம் சென்னை மருத்துவர்கள்தான்.</>அதே சமயம், ஒரு விக்ஸ் டப்பா வாங்கினால்கூட, அதில் என்னென்ன மருந்து பொருட்கள் இருக்கின்றன என்பது டப்பாவில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. ஆனால், மூலிகை மருந்துகள் பல அப்படி இல்லை. அலோபதி மருந்துகளுக்கு வரையறுக்கப்பட்ட சட்ட விதிகள் இருப்பது போல, மூலிகை மருந்துகளையும் பல பரிசோதனைகளுக்கும், சட்ட விதிகளுக்கும் உட்படுத்தி அலோபதி மருத்துவர்களாலும் பரிந்துரைக்கப்படுகிற மருந்தாக்க நம் அரசாங்கம்தான் முயற்சி செய்ய வேண்டும்” என்றார் முத்தாய்ப்பாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக