செவ்வாய், 21 ஜூன், 2016

1974 ஜுன் 29-ந்தேதி கலைஞர் கூட்டிய கச்சதீவு ஒப்பந்த எதிர்ப்பு கூட்ட விபரம்

Venkat Ramanujam: கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை, மிக அவரசரமாக 1974 ஜுன் 29-ந்தேதி சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் கருணாநிதி கூட்டினார். கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் வருமாறு:-
1. பொன்னப்ப நாடார் (ப.காங்கிரஸ்)
2. ஏ.ஆர்.மாரிமுத்து (இ.காங்கிரஸ்)
3. திருப்பூர் மொய்தீன் (முஸ்லிம் லீக்)
4. அரங்கநாயகம் (அ.தி.மு.க.)
5. வெங்கடசாமி ,ஜி.சாமிநாதன் (சுதந்திரா)
6. ஈ.எஸ்.தியாகராசன் (தமிழரசு கழகம்)
7. ஏ.ஆர்.பெருமாள் (பார்வர்டு பிளாக்)
8. மணலி கந்தசாமி (தமிழ்நாடு கம்ïனிஸ்டு)
9. ம.பொ.சிவஞானம் (தமிழரசு)
10. அப்துல் வகாப் (முஸ்லிம் லீக்)
11. ஆறுமுகசாமி (இ.காங்கிரஸ்)
12. சக்தி மோகன் (பா.பிளாக்)
13. ஏ.ஆர்.தாமோதரன் (ஐக்கிய கட்சி)
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது:
"இந்தியாவுக்குச் சொந்தமானது என்று நாம் கருதுவதும், தமிழ்நாட்டுக்கு நெருக்கமான உரிமை கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவை இந்தக் கூட்டம் விவாதித்தது. தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தை திருத்தி அமைத்து தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது.''
எல்லா கட்சித் தலைவர்களும் தீர்மானத்தில் கையெழுத்துப் போட்டு ஒப்புதல் தெரிவித்து இருக்கிறார்கள் இ.காங்கிரஸ் உட்பட.
அ.தி.மு.க. பிரதிநிதி, தீர்மானத்தில் கையெழுத்து போட மறுத்துவிட்டு போய்விட்டார்.
கச்ச தீவு பிரச்சனையில் எம்ஜியார் ஏன் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்து ஓடினார் ஓடினார் ராமாபுரம் தோட்டம் தாண்டி ஏன் ஓடினார் என்ற உண்மையை எழுதினால் இந்த பூமி சிரிக்கும் ..அந்த சாமி சிரிக்கும் ..

தமிழக நிலமோ : 50,216 mi²
கச்சத்தீவு நிலமோ : 0.44 mi²
14 நூற்றாண்டில் உருவான எரிமலை குழம்பு தான் கச்சத்தீவு .. கச்சத்தீவு total area is only 285-acres ie.,0.0008% of tamil nadu's land
But can this island problem can be solved with in two nations or through International courts .. If looked for real solution only International courts can do justice . What ruling ADMK doing is only beating around the bush ..this solves no purpose .
blame game பிரச்னையை விட்டு தள்ளி ., கச்சத்தீவு விவகாரத்தில் உணர்ச்சி வசப்படாமல் let us analyse :
தமிழகத்தின் 0.0008% நிலப்பரப்பே கச்சத்தீவு இதனை நமது சட்டமன்றம் நேரத்தை செலவிடுவது நமது வரி பணத்தை விரயம் செய்வது தான் என்ற கோணம் ஒன்று இருப்பதையும் .,
மற்றொரு கோணமான இலங்கையில் தமிழர் வாழும் வடமாகாணசபையின் கிழக்கு மாகாணசபையின் பிரதான அரசியல் கட்சிகளின் கருத்து மற்றும் இலங்கை வாழ் தமிழ்மீனவர்களின் கருத்து - நமது தமிழக மீனவர்களின் கருத்துடன் 180 டிக்ரீ எதிர் நிலையில் உள்ளதை கவனத்தில் வைக்க வேண்டாமா ..
தமிழ்நாட்டின் மக்கள் மேல செல்வி ஜெயலலிதா சேர்த்து வைத்த 2.1 lakhs Crores கடன் ஏராளம் .. 0.0008% பிரச்னையை விட்டு தள்ளி தமிழகம் எதிர் நோக்கி உள்ள பணிகள் உண்மையில் மலைக்க வைக்க கூடியது ..
1)Loss of GDP
2) Aggression of FDI investment in our neighbour states
3) GST implementation loss of revenue
4) Higher interest of 21000 crores every annum
5) Implementation of Pay Commission to Govt. Employees that causes another 7000 crores expenses .
தமிழகத்தை திமுக வை விட அதிமுக ஆண்டது அதிகம் . சும்மா சும்மா கச்சதீவு என்று கச்சை காட்டாமல் ஒழுங்கா நிர்வாகம் செய்வதையே தமிழக மக்கள் விரும்பமாக இருக்கும் ..செய்விர்களா நீங்கள் செய்விர்களா ..
Bored to see emotional ‪#‎jayalalitha‬ increase her Blood pressure . Kindly let madam Jayalalitha Keep calm and work for improvement of Tamilnadu Economic development First& Venkat Ramanujam facbook

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக