ஞாயிறு, 5 ஜூன், 2016

10.30 க்கு மோடி ஜெயா டீல் ! ஐ.ஜே.கே தொகுதிகளில் முன்பு பெற்ற வாக்குகள் அப்படியே அதிமுகவுக்கு... தேர்தல் தின தில்லுமுல்லு


அமைச்சர் ஆனதும் ஸ்ரீவில்லிபுத்தூர்போன ராஜேந்திரபாலாஜிக்கு, ஆண்டாள் கோயில் யானையைவைத்து மாலைபோட்டு உள்ளார்கள். கோயிலின் வளாகத்தில் உள்ள புனிதமான இடமான நந்தவனத்தில் ஒரு மணிநேரத்துக்கு மேல் பட்டாசு போட்டுள்ளார்கள். 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்த ஹாரன் சத்தத்தில் ஆண்டாள் கோயிலே அதிர்ந்ததாம். ‘‘கோயிலுக்கு யாரும் வரலாம்... போகலாம். அமைதியாக வணங்கிச் செல்லாமல் மன்னர்களுக்கு யானைகள் மாலை போடுவதுபோலப் போட்டதையும் புனிதமான நந்தவனத்தை அமளிதுமளிப்படுத்தியதையும் யாரிடம் போய்ச் சொல்வது?

தேர்தலுக்கு முன்பு சசிகலா வந்தார். அவர் வந்ததும் தெரியாது, போனதும் தெரியாது. ஆனால், ராஜேந்திரபாலாஜி காட்டும் பந்தாவுக்கு அளவில்லாமல் போய்விட்டது. தான் ஜெயித்தது மட்டுமல்ல, மாவட்டத்தில் இருந்த தனது அனைத்து எதிரிகளும் தோற்றுப்போனார்கள் என்பதற்கான கொண்டாட்டம்தான் இது” என்கிறார்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆட்கள்.

அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டதா ஐ.ஜே.கே.?


அரியலூரில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சிவசங்கர் எழுதிய முகநூல் பதிவு:

‘‘ஐ.ஜே.கே கட்சியின் வாக்குகளைக் கவனத்தீர்களா?’’ என ஒரு தோழர் கேட்டார். ஆராய்ந்தேன். 1,330 வாக்குகள் பெற்றிருந்தார் வேட்பாளர் சகோதரர் பாஸ்கர். கடந்த தேர்தலில் இதே பாஸ்கர் பெற்ற வாக்குகள் 9,501. 9,501 - 1,330 = 8,171. இந்த வாக்குகள் எங்கே போயின என்ற ஆராய்ச்சியில் இறங்கினோம்.

ஒரு ஐ.ஜே.கே நிர்வாகி சிக்கினார். “என்னாச்சி உங்கக் கட்சிக்கு?” என்று கேட்டோம். “நம்ம வேட்பாளர் வெற்றி பெற முடியாது. அதனால அ.தி.மு.க-வுக்கு போட்டுடுங்​கன்னு எங்கக் கட்சித் தலைவர் சொல்லிட்டாரு. நாங்க அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டுட்டோம். இங்க மட்டுமில்லை. எல்லாத் தொகுதி​களிலும்தான்’’ என்றார். குன்னம் தொகுதியில் 2006-ல் ஐ.ஜே.கே பெற்ற வாக்குகள் 13,735. இப்போது பெற்றிருக்கும் வாக்குகள் 1,168-தான். ஷாக் அடித்தது. பக்கத்துத் தொகுதியான லால்குடியைக் கவனித்தேன்.

 14,404 வாக்குகள் 802 ஆகியிருந்தது. ஐ.ஜே.கே நின்ற எல்லாத் தொகுதிகளிலும் இதுதான் நிலைமை. காலை 11.00 மணிக்கே பிரதமர் மோடி வாழ்த்துச் சொன்ன மர்மம் அதுதான். மோடி வழிகாட்டுதல்படி, ஐ.ஜே.கே வேட்பாளர்கள் போட்டியிட்டத் தொகுதிகளில் வாக்குகள் காணாமல் போயிருக்கின்றன. ஜெயலலிதா உளவுத்துறை மூலம் கணக்கெடுத்து, வெற்றி பாதிக்கும் இடத்தில் ஐ.ஜே.கே போன்ற கட்சிகளின் ஆதரவை மறைமுகமாகப் பெற்றுள்ளார். குறுக்கு வழியில் வெற்றிகளைப் பெற்றுத்தான் முதல்வராகி உள்ளார் ஜெயலலிதா. நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக