திங்கள், 16 மே, 2016

TN Exit Poll திமுக..124, அதிமுக 90, இதர கட்சிகள் +......C Voter Exit கணிப்பு அதிமுக தனிப்பெரும்பான்மை.....

டெல்லி: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 124 முதல் 140 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாக இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே, சிஎன்என் நியூஸ் 18 சேனல்கள் தெரிவித்துள்ளன. அதிமுக 89 முதல் 101 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகள் தவிர 232 சட்டசபை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. Exit poll predicts 124 seats for DMK, 90 for AIADMK வாக்குப்பதிவு பிந்தைய கருத்துக்கணிப்பை இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் இன்று வெளியிட்டது.
அதன்படி தமிழகத்தில் திமுக 124 முதல் 140 இடங்களில் வெல்லும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. அதிமுக 89 முதல் 101 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், பாஜக 3 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் ஆக்சிஸ் - மை இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. பிற கட்சிகள் 4 முதல் 8 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதன்மூலம் அதிமுகவின் 5 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருகிறது. திமுக ஆட்சி மீண்டும் உதிக்கிறது என்றும் இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே, சிஎன்என் நியூஸ் 18 சேனல்கள் தெரிவித்துள்ளன.

Read more at: //tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக