திங்கள், 16 மே, 2016

Containers Films தயாரிப்பில் "அந்த 18 மணித்தியாலங்கள்" ... (அல்லது அந்த 570 கோடிகள்!)

Containers Films பெரும் பொருட் செலவில் தயாரிக்கும் பிரமாண்ட திரைப்படம்தான்  "அந்த 18 (மணித்தியாலங்கள்" (அல்லது அந்த 570 கோடிகள்").
இது ஒரு தமிழக ஆந்திரா டெல்லி கூட்டு தயாரிப்புஆகும். இது கின்னஸ் சாதனையில் நிச்சயம் இடம்பெறும். ஏனென்றால் ஒரு திரைப்படம் தயாரிக்கும் பொழுதே திருட்டு விசிடி தயாரிப்பாக இதுவரை உலகின் எந்த மொழியிலும் எந்த நாட்டிலும் உருவானதில்லை. அந்த வகையில் இது ஒரு புரட்சி திரைப்படமாகும்.   
டைரக்டர் கொடை மணி சுவாமியின்  சிறுதாவூர் பிக்சர்ஸ்  தயாரிப்பாக தமிழ் தெலுங்கு  ஹிந்தி ஆகிய மும்மொழிகளில் தயாராகிறது " அந்த 18 மணித்தியாலங்கள்".
நாம் அறிந்தவரை இதன் கதை இதுவரை உலகமே கண்டிராத பல திடுக்கிடும் திருப்பங்களையும் நம்பவே முடியாத பயங்கர முடிச்சுகளையும் கொண்டிருப்பதாக கிசு கிசுக்கள் கூறுகின்றன.

இதில் ஆந்திரா ரவுடி ராஜ்ய தாடிவாலா மற்றும்  வடநாட்டு கேப்மாரி கும்பல்களும் இணைந்து   யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பெரும் பட்டையை கிளப்புகிறார்கள்.  
முதலில் இதன் கிளைமாக்ஸ் காட்சி விதிவசத்தால் மாற்றப்பட வேண்டியதாயிற்று என்று தெரியவருகிறது. அதாவது படத்தின் முக்கிய பைனான்சியர்கள் கதையின் போக்கில் சில அதிருப்திகளை வெளிப்படுத்தியதாக  தெரிகிறது.
இப்படியே காட்சிகள் படமாக்கப்பட்டால் வசூல் கோவிந்தாவாகி விடும் என்று ஆந்திரா விநியோகஸ்தர்கள் பயப்பட்டதாகவும் அதன் காரணமாகவே கிளைமாக்ஸ் காட்சிகள் மாற்றப்பட்டு ஒரு ஆண்டி கிளைமாக்ஸ் புகுத்தப்பட்டதாக வசனகர்த்தா ஒருவர கூறினார்.
இந்த படத்தில் மேலும்  பல சிறப்புக்கள் உண்டு. முதலில் இதன் தயாரிப்பில் ஆந்திரா மற்றும் ஹிந்தி விநியோகஸ்தர்கள் இருவரும் பைனான்ஸ் செய்துள்ளார்கள்.
இதன் படப்பிடிப்புக்கள் வேகமாக நடந்து வருகிறது.
தயாரிப்பில் இருக்கும் ஒரு திரைப்படத்தின் காட்சிகளை லீக் செய்வது அதன் வசூலை பாதிக்கும் என்பதால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக