சனி, 28 மே, 2016

ப.சிதம்பரம் ராஜ்யசபா எம்பி ...மகாராஷ்டிராவில் போட்டி!

புதுடெல்லி: நாடு முழுவதும் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பாளர்களை ஒவ்வொரு கட்சியும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில் ப.சிதம்பரம், ஆஸ்கர் பெர்னாண்டஸ், ஜெய்ராம் ரமேஷ், அம்பிகா சோனி, விவேக் தன்கா, கபில் சிபல், சயா வர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து போட்டியிடுகிறார். உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து கபில் சிபல், கர்நாடகாவில் இருந்து ஜெய்ராம் ரமேஷ் போட்டியிடுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக