சனி, 28 மே, 2016

கலைஞர்: திமுக தோல்விக்கு தேர்தல் கமிஷனே காரணம்

சென்னை : ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு திமுக தலைவர் கருணாநிதி அளித்துள்ள பேட்டியில், தேர்தல் பணிகள் தொடங்கியதில் இருந்தே தேர்தல் கமிஷன் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டது. அவர்கள் ஆளும் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து செயல்பட்டார்கள். ஆளும் கட்சியின் பண பலமும், தேர்தல் கமிஷனின் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளும் தி.மு.க.வை தோல்வி அடைய செய்துவிட்டன.
தி.மு.க.வை பொறுத்த வரை எந்த சவால்களையும் சந்திக்கும் நிலையிலேயே உள்ளது. தற்போது ஆளும் கட்சி, தி.மு.க.வை விட பல சவால்களை சந்தித்தாக வேண்டும். இப்போது முதல்வர் மாநில நன்மைக்காக தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக கூறி இருக்கிறார். தமிழகத்திற்கு நல்லது கிடைக்கும் என்றால் தி.மு.க. சேர்ந்து பணியாற்ற ஒருபோதும் மறுத்ததில்லை. அதை வரலாறு சொல்லும்.
தஞ்சை, அரவக்குறிச்சியில் ஏற்கனவே திட்டமிட்ட படி தேர்தல் நடத்தி இருந்தால் 2 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும். தேர்தல் தள்ளி வைக்கப்பட்டாலும் எங்கள் வெற்றி பாதிக்காது என தெரிவித்துள்ளார் தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக