சனி, 21 மே, 2016

கலைஞர் : அரவக்குறிச்சி தஞ்சாவூர் சதி...நானே களத்தில் இறங்கி போராட்டம்!

அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் நடைபெற இருந்த தேர்தலை தள்ளிவைத்தது திமுகவுக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சி என்று கருணாநிதி கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது திட்டமிட்ட சதி. தேர்தல் ஆணைய நடவடிக்கைகள் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளது. தேர்தல் ஆணையம் ஜெயலலிதாவுக்கு அடிமை ஆணையமாக உள்ளது. தேர்தலை தள்ளிவைத்தது திமுகவுக்கு எதிராக செய்யப்படும் சூழ்ச்சி. அறிவித்த தேதியில் தேர்தல் நடத்தாவிட்டால் களத்தில் இறங்கி திமுக போராட்டம் நடத்தும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக