ஞாயிறு, 15 மே, 2016

ஜெயலலிதா: : தீய சக்தியின் நச்சு முயற்சிகளை மக்கள் கவனமாக முறியடிக்க வேண்டும்.... ஆஹா ஒப்புதல் வாக்குமூலம்?

சென்னை: தமிழக மக்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள முதல்வர் ஜெயலலிதா தீய சக்தியின் நச்சு முயற்சிகளை மக்கள் கவனமாக முறியடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள பெற்றிருக்கின்ற அற்புதமான வாய்ப்பு தான் தேர்தலும், வாக்குப் பதிவும். தேர்தலில் வாக்குகளைப் பதிவு செய்வது ஒரு புனிதக் கடமை. ஜனநாயகத்தைக் காப்பது நமக்கும், நம் சந்ததியினருக்கும் நாம் செய்து கொள்ளுகின்ற மிகப் பெரிய புனிதச் செயலாகும். அரசியலில் தன்னுடைய வெற்றிக்காக, தன்னுடைய அதிகாரப் பசிக்காக சிலர் தாங்கள் பெற்ற பிள்ளைகளையே சுயநலம் என்னும் பலிபீடத்தில் பலியிடுவதையும், அரசியல் ஆதாயங்களுக்காக எதை வேண்டுமானாலும் பேசி, யாரை வேண்டுமானாலும்
களங்கப்படுத்துவதையும், சூழலுக்கு ஏற்ப திரைக் கதை வசனத்தை அரங்கேற்றுவதையும் தமிழகம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
அத்தகைய தீய சக்தியின் நச்சு முயற்சிகளை தமிழக மக்களாகிய நீங்கள் கவனமாக இருந்து முறியடிக்க வேண்டும்.
நம்முடைய வாக்குகளை சரியாகப் பதிவு செய்வது, நம்முடைய உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ளவும்; உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும்; அச்சமின்றி வாழவும் நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் என்பதை வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் மறவாதீர்கள்.
வாக்குப் பதிவு நாளான்று ஒவ்வொருவரும் காலையிலேயே வாக்குச் சாவடிக்கு சென்று உங்கள் பொன்னான வாக்குகளை, தமிழகத்தில் நிலவும் வளமும், நலமும் தொடர்ந்திடும் வகையில் பதிவு செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.  dhinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக