ஞாயிறு, 15 மே, 2016

BBC :பிரெஞ்சு பெண் அரசியல்வாதிகள் ஆண் அரசியல் வாதிகளுக்கு எதிராக போர்க்கொடி ..பாலியல் துன்புறுத்தல்கள் !

பிரெஞ்சு அரசியலில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை இனியும் தாங்கள் மவுனமாக சகித்துக்கொள்ள மாட்டோம் என்று பிரான்ஸின் முன்னாள் அமைச்சர்கள் பதினேழுபேர் கூட்டு பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். பல்வேறு கட்சிகளைச் சார்ந்த இந்த பதினேழு முன்னாள் அமைச்சர்களும் பெண்கள். ஆண்களின் ஏகபோக கோட்டையாக இருந்துவந்த அரசியலில் தாங்கள் அனைவரும் பாலியல்ரீதியிலான ஒதுக்கல், புறக்கணிப்புகள், சீண்டல்கள் உள்ளிட்ட பல்வேறுவகையான பாலியல் துன்புறுத்தல்களை தொடர்ந்து அனுபவித்ததாக தெரிவித்துள்ளனர்.
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பிரெஞ்சு துணை சபாநாயகர் டெனிஸ் பௌபின் சமீபத்தில் பதவி விலகினார் இந்த போக்கை இனியும் இப்படியே தாங்கள் சகித்துக்கொண்டிருக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ள இவர்கள், இது தொடர்பான சில ஆண்களின் நடத்தை மாறவேண்டும் என்றும் தற்போதைய பிரெஞ்சு சட்டங்கல் முறையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் அவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் துணை சபாநாகயர் டெனிஸ்பௌபின் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து பதவி விலகினார். தம் மீதான புகாரை அவர் தொடர்ந்து மறுத்துவருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக