புதன், 4 மே, 2016

வங்கதேசத்தில் தொடரும் முசுலீம் மதவெறி படுகொலைகள்.. சுதந்திர சிந்தனையாளர் நசீம் படுகொலை.


நசீம் ஒரு மத சார்பற்ற இணைய ஆர்வலராகவும், இசுலாமிய மதத்தின் பிற்போக்குதனங்களை தொடர்ந்து கடுமையாக விமர்சித்தும், எந்த ஒரு சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராக போராடியவர்  நசிமுதீன் சமத் – பங்களாதேஷ் என்று அழைக்கப்படும் வங்கதேசத்தில், இசுலாமிய மதத்தின் பிற்போக்குத்தனத்தை தொடர்ந்து விமர்சித்தும், அம்பலபடுத்தியும் வந்த முதுகலை சட்ட மாணவரும்,
ஜனஜக்ரன் மஞ்ச் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான 28 வயது நிரம்பிய நசிமுதீன் சமத், இசுலாமிய மத வெறியர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நசிமுதீன் சமத் (28) இணையத்தில் தொடர்ச்சியாக பதிவுகளிலும், முகநூலிலும் நாத்திக பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில், வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது மூன்று கொலையாளிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த மூன்று கொலையாளிகளும் ஒரே இரு சக்கர வாகனத்தில் வந்ததுடன் முதலில் கத்திகளாலும் பின்னர் துப்பாக்கியால் சுட்டும் அவரை படுகொலை செய்து உள்ளனர்.

நாத்திகவாதிகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த படுகொலைகளுக்கு எதிராக அந்த நாட்டின் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மத பயங்கரவாத  சக்திகளுக்கு எடுப்பார் கைப்பிள்ளை போல செயல்படுவதையே காட்டுகிறது.
நசீம், ஜனஜக்ரன் மஞ்ச அமைப்பில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வந்த அதே நேரத்தில் சில்கெட் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பங்கபந்து ஜாதிய ஜீவோ பரிசத் எனும் அமைப்பின் தகவல் மற்றும் ஆராய்ச்சி செயலாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
அசிம் தொடர்ச்சியாக, சமூக பிரச்சினைகள் குறித்தும், சட்ட ஒழுங்கு சீரழிவு குறித்தும், இசுலாமிய அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும், 1971-ல் நடைபெற்ற பங்களாதேஷ்-பாகிஸ்தான் போரின் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வலியுறித்திய  நாடு தழுவிய அளவில் 2013 ல் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவாகவும் தமது கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார்.
2013-ல் நடந்த போராட்டத்திற்கு ஆதரவாகவும், இசுலாமிய அடிப்படைவாதத்தை விமர்சித்து எழுதியும் வந்த 84 பதிவர்களின் பட்டியலை அதே ஆண்டில் இசுலாமிய மதவெறியர்கள் வெளியிட்டனர். அந்த பட்டியலில் நசீமின் பெயரும் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் முன்கூட்டியே வகுக்கப்பட்ட முறையான திட்டத்தின் அடிப்படையில் தான் இந்த படுகொலைகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது தெரிகிறது. ஆனால் இந்த பதிவர்களுக்காக பங்களாதேச அரசு எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை.
கடந்த இரண்டு மாத காலமாக தான் முதுகலை சட்டப் படிப்பிற்காக டாக்காவில் உள்ள ஜெகநாத் அரசு பல்கலைகழகத்தில் படித்து வந்துள்ளார். கொலை செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பாக நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுகள் குறித்து தமது கவலையை பேஸ்புக்கில் பதிந்து இருந்தார்.
ஆனால் இந்த மதவெறியர்கள் காட்டுமிராண்டிகள் என்பதை தொடர்ந்து அவர்களாகவே வெளிகாட்டிக் கொள்கின்றனர். படுகொலைகள் தொடர்ந்த போதும் மீண்டும் மீண்டும் அவர்கள் விமர்சிக்கபடுவதும் மக்கள் முன் அம்பலம் ஆவதும் தொடர்கதையாகி வருகிறது.
இம்ரான் சர்கர்
இம்ரான் சர்கர்
இம்ரான் சர்கர், வங்கதேசத்தின் மிகப்பெரிய மத சார்பற்ற ஆர்வலர் குழுவின் ஒருங்கினைப்பாளராவார் மற்றும் இணையப் பதிவர்களின் தலைவர்.  2013-ல் பாகிஸ்தானுக்கு எதிரான வங்க விடுதலை போரில், போர் குற்றம் புரிந்த தலைவர்களுக்கு எதிராக நசீம் தொடர்ந்து உரக்க குரல் எழுப்பி வந்ததாக இம்ரான் கூறுகிறார்.
அது மட்டுமல்லாமல் நசீம் ஒரு மத சார்பற்ற  இணைய ஆர்வலராகவும், இசுலாமிய மதத்தின் பிற்போக்குதனங்களை தொடர்ந்து கடுமையாக விமர்சித்தும், எந்த ஒரு சமூகப் பிரச்சினைகளுக்கு எதிராக போராடியும் வந்ததாக இம்ரான் கூறினார்.
வங்கதேசத்தில் இப்படி தொடர்ச்சியாக சமூக ஆர்வலர்களின் மேல் தொடுக்கப்படும் இந்த பயங்கரவாதம் இங்கேயும் இந்து பயங்கரவாதமாக கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, நரேந்திர தபோல்கர் , ரோஹித் வெமுலா உள்ளிட்ட எண்ணற்ற அறிவுஜீவிகளையும், நாத்திகவாதிகளையும் காவு வாங்குகிறது.
அரசியலைமைப்பின் படி இரு நாடுகளும் தம்மை மதசார்பற்ற நாடுகளாக தான் கூறிக் கொள்கிறன. மக்களின் குடியரசாகதான் தம்மை பிரகடனம் செய்து கொள்கின்றன. ஆனால் நடைமுறையில் அது பயங்கரவாதத்தையும், பிற்போக்குத்தனங்களையுமே ஆரத்தழுவுகின்றன.
நசீமுதின் இப்போது கொல்லப்பட்டு விட்டார். ஆனால் அவரைக் கொன்ற முஸ்லீம் மதவெறியர்களை வங்கதேச உழைக்கும் மக்கள் ஒழித்துக் கட்டுவார்கள்  vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக