புதன், 4 மே, 2016

அமித் ஷா : மத்திய அரசு வழங்கிய 2000 கோடி வளர்ச்சி திட்டங்களுக்கு வழங்காமல்... அதிமுக திமுக இரண்டும் ஊழல்கட்சிகள்

சென்னை, மே 4:அதிமுக, திமுக இரண்டுமே ஊழல் கட்சிகள் என்றும், 50 ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை என்றும் பிஜேபி தேசிய தலைவர் அமித்ஷா குற்றஞ்சாட்டியிருக்கிறார்.பால் கொள்ளை, மணல் கொள்ளை என பல்வேறு கொள்ளைகள் நடை பெற்று இருப்பதாகவும் அவர் கூறினார். சென்னையில் வந்தபோது அதிமுக அரசு தூங்கிக்கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பிஜேபி வேட்பாளர் களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று பட்டுக் கோட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி வேண்டுமா? மாற்றம் வேண்டுமா? வளர்ச்சி வேண்டுமா? என்பதை தீர்மானிக்கும் தேர்தலே இது. ஊழலா? வளர்ச்சியா? என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டும்.
கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளுக்கு நீங்கள் மாறிமாறி வாக்களித்து இருக்கிறீர்கள். இந்த இரு கட்சிகளுமே ஊழலில் திளைத்த கட்சிகள். திமுக மீது 2ஜி ஊழல்,
ஏர்செல் மேக்சிஸ் ஊழல்கள் உள்ளன.

அதிமுக தலைமை சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்று விட்டு வந்துள்ளது. பால் கொள்முதலில் ஊழல் நடந்திருக்கிறது. மணல் கொள்ளையில் ரூ.20 ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்திருக்கிறது.ஊழலில் ஊற்றுக்கண்களாக விளங்கும் இந்த இரு கட்சிகளையும் புறக்கணியுங்கள். கடந்த 50 ஆண்டு களுக்கும் மேலாக தமிழகம் ஒரே குடும்பத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறது.

2014 மக்களவை தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்பி நரேந்திர மோடிக்கு வாக்களித்தார்கள். கடந்த 2 ஆண்டுகளாக மோடி அரசு மீது எந்த புகாரும் இல்லை. ஊழலற்ற ஆட்சி மத்தியில் நடந்துகொண்டிருக் கிறது. அதே மாற்றம் தமிழகத்தில் ஏற்பட வேண்டுமானால் நீங்கள் பிஜேபிக்கு தாமரை சின்னத்திலும், கூட்டணி வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னங்களிலும் வாக்களிக்க வேண்டும்.கடந்த டிசம்பரில் மழை வெள்ளம் ஏற்பட்டபோது பிரதமர் மோடி தமிழ் நாட்டிற்கு ஓடோடி வந்தார். ஆனால் மாநில அரசோ உறங்கிக்கொண்டிருந்தது.

வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.2000 கோடியை வளர்ச்சி திட்டங்களுக்கு வழங்கா மல் அம்மா பெயரில் நிவாரணம் வழங்கப்பட்டது.ரேஷன் கடைகளில் இலவச அரிசி திட்டத்துக்கு கிலோ ஒன்றுக்கு மத்திய அரசு ரூ.3 கொடுக்கிறது. ஆனால் இதை மறைத்து விட்டு அம்மா அரிசி என்று இலவசமாக கொடுக்கிறார்கள். மின் துறையை சீரமைத்து பயனளிக்கும் வகையில் உதய் திட்டம் கொண்டுவரப்பட்டது.ஆனால் தங்களுக்கு எதுவும் கிடைக்காது என்பதால் மாநில அரசு இதை புறக்கணித்துவிட்டது.
இதேபோல் மத்திய அரசின் ரூ.12 பிரிமிய தொகையுடன் காப்பீட்டு திட்டம் உள்பட பல்வேறு நலத்திட் டங்கள் மாநில அரசால் மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை.  maalaisudar.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக