ஞாயிறு, 29 மே, 2016

முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது என்ற ஆய்வு முடிவை தட்டிக்கழிக்க முடியாது: பினராயி விஜயன்

டெல்லி: முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது என்ற ஆய்வு முடிவை தட்டிக்கழிக்க முடியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கேரள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரசிடம் இருந்து ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பினராய் விஜயன் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.றையாக நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள கேரள அரசு இல்லத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்த அவர், பின்னர் துணை ஜனாதிபதியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதேபோல் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியையும் சந்தித்தார். இதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து பேசினார். அப்போது, முல்லைப்பெரியாறு அணை தேவையான அளவு பலமாக உள்ளது என்ற நிபுணர் குழுவின் ஆய்வு முடிவுகளை தட்டிக்கழிக்க முடியாது என்றும் தெரிவித்தார். "அணை பாதுகாப்பாக உள்ளதா? என்பதுதான் முதல் பிரச்சனை. மக்களின் பாதுகாப்பு கருதி முல்லைப் பெரியாறு பிரச்சினை அணுகப்பட்டது. ஆய்வு முடிகளின் தன்மையை பொருத்தே பிரச்சனையை அணுக முடியம்' என்றும் அவர் கூறினார்.

Read more at: //tamil.oneindia.com/n

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக