திங்கள், 2 மே, 2016

நேர்மையான அதிகாரிகளை மாற்றம் செய்வதா? அதிமுக தம்பிதுரை கடும் கோபம்....

சென்னை: அ.தி.மு.க ., வெற்றி பெறும் சூழல் நிலவுவதால் எதிர்கட்சியினர் மாநிலத்தின் நேர்மையான அதிகாரிகளை மாற்றம் செய்ய புகார் அளித்துள்ளனர் என்றும், இதனை தேர்தல் கமிஷன் நிராகரிக்க வேண்டும் என்றும் அ.தி.முக., சார்பில் தலைமை தேர்தல் கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.திருவனந்தபுரத்தில் இருக்கும் தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதியிடம் துணை சபாநாயகர் தம்பித்துரை நேரில் ஒரு மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நேர்மையான ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம் எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அதிகாரிகள் மாற்றத்திற்கான எவ்வித ஆதாரங்களும் தெரிவிக்கப்படவில்லை.
அ.தி.மு.க., வெற்றியை உணர்ந்து கொண்ட தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் இவ்வாறு புகார் தெரிவித்துள்ளன. இதனை தேர்தல் கமிஷன் ஏற்க கூடாது. மாற்றப்பட்ட அதிகாரிகள் மீண்டும் அதே இடத்தில் பணியமர்த்தப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. >கடந்த சில வாரங்களாக நேர்மையாக நடக்க தவறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் 20க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் ., அதிகாரிகளை தேர்தல் கமிஷன் தமிழகத்தில் மாற்றியது.தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக