திங்கள், 16 மே, 2016

மேக்கப் இல்லாமல் வந்து ஒட்டு போட்ட சினிமா பிரபலங்கள்

தினமணி.com: தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 232 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சுமார் 5.77 கோடி வாக்காளர்கள், தேர்தலில் போட்டியிடும் 3,728 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்க உள்ளனர். வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 82 லட்சத்து ஆயிரத்து 620 வாக்காளர்கள் உள்ளனர். அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால், அங்குள்ள 4 லட்சத்து 68 ஆயிரத்து 113 வாக்காளர்களைத் தவிர்த்து, 5 கோடியே 77 லட்சத்து 33 ஆயிரத்து 574 வாக்காளர்கள் திங்கள்கிழமை வாக்களிக்க உள்ளனர். அவர்களில், ஆண்கள், 2 கோடியே 86 லட்சத்து 36 ஆயிரத்து 94, பெண்கள் 2 கோடியே 90 லட்சத்து 92 ஆயிரத்து 778, மூன்றாம் பாலினத்தவர் 4ஆயிரத்து 702.

வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தேர்தலில் சினிமா பிரபலங்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்துள்ளார்கள். ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பெரும்பாலான நட்சத்திரங்கள் வாக்களித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதன் தொகுப்பு.
 
 
 

 
 


 
 
 


 
 
 
 
 
 
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக