திங்கள், 16 மே, 2016

ஒரு வங்கிக் கிளைக்கு ரூ. 570 கோடியா?… ப.சிதம்பரம் ஆச்சரியம்


சென்னை: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடி அருகே உள்ள தனது சொந்த ஊரான கண்டனூரில் இன்று காலை ஓட்டுப் போட்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் திமுக காங்கிரஸ் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று தெரிவித்தார். காரைக்குடி அருகே கண்டனூரில் ப.சிதம்பரத்திற்கு வாக்கு உள்ளது. இங்கு அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் திங்கள் கிழமை காலை 7 மணிக்கு அவர் வாக்களித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக – காங்கிரஸ் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறும்.தேர்தல் ஆணையம் பணம் பட்டுவாடாவை தடுப்பதில் தோல்வியடைந்துவிட்டது.
சில இடங்களில் வாகனச்சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள பணம் அதிமுக பிரமுகர்களுடையது. தேர்தல் தள்ளிவைப்பு என்பது அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் அதனை அறிவித்திருக்கலாம்.
ஒரு வங்கிக் கிளைக்கு ரூ. 570 கோடி என்ற இவ்வளவு பெரிய தொகையை கொண்டு செல்வது என்பது அரிதான விஷயமாக உள்ளது என்றார் ப.சிதம்பரம். vikatan.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக