செவ்வாய், 24 மே, 2016

தமிழக முதல்வர் ஜெயலலிதா :ஸ்டாலினையோ, திமுகவையோ அவமதிக்கும் நோக்கம் இல்லை :

ஸ்டாலினையோ, திமுகவையோ அவமதிக்கும் நோக்கம் இல்லை : ஜெயலலிதா விளக்கம் ஜெயலலிதா பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பின் இருக்கையில் அமர வைக்கப்பட்டிருந்தார். இதற்கு திமுக தலைவர் கலைஞர் நேற்று கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா இதற்கு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ’’பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான பகுதியில் ஸ்டாலின் அமர வைக்கப்பட்டுள்ளார். அதாவது விழாவில் பதவி வரிசைப்படி விஐபிகளுக்கு இடம் வழங்கப்பட்டது. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இடம், அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அது, ஸ்டாலினையோ அல்லது திமுகவையோ அவமானப்படுத்துவதற்காக அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
பதவியேற்பு விழாவுக்கு ஸ்டாலின் வருவது குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்தால், வரிசை முறையைத் தளர்த்தி ஸ்டாலினுக்கு முன் வரிசையில் இடமளிக்குமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டிருப்பேன். தமிழக வளர்ச்சிக்காக திமுகவுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். மாநில முன்னேற்றத்துக்காக ஸ்டாலினும், திமுகவும் செயல்படுவதற்கு எனது வாழ்த்துகள்’’ என்று கூறியுள்ளார் ஜெயலலிதா<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக