செவ்வாய், 24 மே, 2016

பச்சை நிறம்.. புதன் ஓரை.. 29 பேர் பதவியேற்பு.. 5 கோப்புகள்

சென்னை : தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று 6வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவரது பதவியேற்பு விழா சென்னை பல்கலை. நூற்றாண்டு விழாவில் நடைபெற்றது. கோலாகலமாகத் துவங்கிய பதவியேற்பு விழா வெறும் 25 நிமிடங்களில் எளிமையாக  நடந்து முடிந்தது. தமிழக அரசியல் தலைவர்களிலேயே அதிக சென்டிமெண்ட் பார்ப்பவர் ஜெயலலிதாதான். ஜோதிடங்களிலும் அதிக நம்பிக்கைக் கொண்டவர். அந்த வகையில், அவர் தனது சென்டிமெண்ட், ஜோதிட நம்பிக்கை என எதையும் விட்டுக் கொடுக்காமல் 6வது முறையாக பதவியேற்பு விழா நடந்து முடிந்துள்ளது. அவருக்கு மிகவும் ராசியான பச்சை நிறப் புடவை அணிந்து வந்து, பச்சை நிறப் பேனாவில் முதல்வராக பதவியேற்றுக் கொண்டதற்கான கையெழுத்தினை இட்டார். அதோடு, அவருக்கு ராசியான புதன் ஓரையில் பதவியேற்வு விழா நடைபெற்றது. அவருக்கு ராசியான எண்கள் 2 மற்றும் 5. இதில் 2  என்ற எழுத்தின் அடிப்படையில் முதல்வர் ஜெயலலிதா உட்பட 29 (2+9 = 11- 1+1=2) பேர் இன்றைய நிகழ்ச்சியில் பதவியேற்றுக் கொண்டனர்.  எல்லாம்  சரிதான்  ஆனால்  பச்சை பச்சையாக தொகுதிகளை  களவாடி பெற்ற  வெற்றியை கிரகங்கள் சகித்து கொள்ளுமா ? காலை வாரும்  நேரம்  வந்துவிட்டதாக  பெங்களூருவில்  கூறுகிறார்களே ? 

முதல்வராக பதவியேற்றதும், தலைமைச் செயலகத்துக்குச் சென்ற ஜெயலலிதா, டாஸ்மாக் கடை திறப்பு நேரம் குறைப்பு, தாலிக்கு 8 கிராம் தங்கம் உட்பட 5 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
எனவே, அவரது சென்ட்டிமெண்ட் எதுவும் சமரசம் செய்து கொள்ளப்படாமல் இன்றைய பதவியேற்பு விழா இனிதே நடைபெற்றது. தினமணி com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக