வியாழன், 19 மே, 2016

87 வாக்குகள் வித்தியாசத்தில் தொல்.திருமாவளவன் தோல்வி.....விஜயகாந்த் டெபாசிட் போனது

விடுதலை சிறுத்தைகள தலைவர்  தொல்.திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். அதிமுக வேட்பாளர் முருகுமாறன் 48,450 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு தனித் தொகுதிகளில் காட்டுமன்னார்கோவில் தொகுதியும் ஒன்று. 1962-ஆம் ஆண்டு காட்டுமன்னார்கோவில் தொகுதி உருவானது. பொதுத் தொகுதியாக இருந்த இந்த தொகுதி 1967-ஆம் ஆண்டு தனித் தொகுதியானது.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் கடைசி வரை கடுமையாகப் போராடித் தோல்வியைத் தழுவினார்.  இத்தொகுதியில் அவருக்கும், அதிமுக வேட்பாளர் முருகுமாறனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. மிக மிக சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் திருமாவளவன் இருந்ததால் எப்படியாவது வென்று விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசியில் 87 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முருகுமாறன் வெற்றி பெற்றார். திருமாவளவன் தோல்வி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியனரை மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக