புதன், 25 மே, 2016

5 பாக்., ராணுவ அதிகாரிகளுக்கு தூக்கு? அமெரிக்க கப்பலை இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் சேர்ந்து தகர்க்க சதி

5 Navy Officers Sentenced to Death in Pakistan for Trying to Attack US Warship The officers were convicted of planning and orchestrating the September 6, 2014, attack on the Karachi Naval Dockyard located at Pakistan’s Arabian Sea coast. The attack was thwarted by Pakistani military personnel with purportedly two attackers killed and four arrested alive (some sources cite 10 killed, including four rogue naval officers). The attackers allegedly attempted to hijack the F-22P Zulfiquar-class frigate Zulfiqar, the lead ship of its class, with the intention of using the ship’s missiles to attack a U.S. Navy refuel vessel in the Arabian Sea (other sources claim that the target was a U.S. aircraft carrier). இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கடற்படை அதிகாரிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அந்நாட்டு ராணுவ கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக அந்நாட்டு பிரபல செய்தி நிறுவனமான டான் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2014 செப். 6 ல் பாகிஸ்தானில் உள்ள கடற்படை தளத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ஐ.எஸ்., சுக்கு உதவியதாக 5 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற மேஜர் சையீதுஅகமது கூறுகையில்: எனது மகன் அகமது மற்றும் 4 அதிகாரிகள் மீதான குற்றம் தொடர்பாக ரகசியமாக விசாரிக்கப்பட்டு ரகசிய தீர்ப்பு அளிக்கப்பட்டடுள்ளது.

எனது தரப்பு நியாயத்தை கேட்க கூட நேரம் தரவில்லை. இது தொடர்பாக அடவகேட் ஜெனரலுக்கு கடிதம் எழுதியும் பயனில்லை என்றார்.இர்பானுல்லா, முகமது அகமது, நசீர், ஹாசீம்நசீர் ஆகிய 5 அதிகாரிகளுக்கும் தண்டனை வெளிப்படையாக அறிவிக்கப்படாமல் இருப்பதால் 5 பேருக்குரிய தண்டனை எப்போது வேண்டுமானாலும் நிறைவேற்றப்படலாம் என அஞ்சுவதாக குற்றவாளிகளில் ஒருவரின் தந்தை ஒருவர் கூறினார்.தற்போது 4 பேரும் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக