புதன், 25 மே, 2016

மாயாவதிக்கு 150 சிலைகள்.... உபியிலுமா அம்மா வழிபாடு? வெளங்கிடும்?

உ.பி.,யில் மாயாவதிக்கு 150 சிலைகள்: அட்டகாசமான பிரசாரம் ஆரம்பம் லக்னோ: உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரசாரத்திற்காக, மாயாவதியின், 150 உருவச் சிலைகளை வடிவமைக்கும் பணியில், பகுஜன் சமாஜ் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில், சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. அங்கு, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, அனைத்து கட்சிகளும், தேர்தல் பணிகளை இப்போதே துவங்கிஉள்ளன. பிரசார திட்டம், வேட்பாளர் தேர்வு, ,
ஆலோசனை கூட்டம் என, இப்போதே, அனல் பறக்கிறது. ஆனால், தற்போது மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் பகுஜன் சமாஜ், பிரசாரத்தை துவங்கும் முன், கட்சித் தலைவர் மாயாவதியின் சிலையைமாநிலம் முழுவதும் முக்கிய பகுதிகளில் நிறுவ நடவடிக்கை எடுத்து வருகிறது.


இதற்காக 150 சிலைகளை வடிவமைக்க, ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. மூன்றரை அடி உயரத்தில், 40 கிலோ எடையுடன், வெண்கலத்தில், சிலைகள் செய்யப்படுகின்றன. சிற்பிகள் இரவு பகலாக, சிலை செய்யும் பணியில், ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இந்த சிலைகள் அனைத்தும் நிறுவப்பட உள்ளன.

சர்ச்சையில் சிக்கிய மாயாவதி

உ.பி., முதல்வராக, மாயாவதி இருந்தபோது, தன்னுடைய சிலைகளையும், கட்சியின் சின்னமான யானை சிலைகளையும் நிறுவி பெரும் சர்ச்சையில் சிக்கினார். முந்தைய ஆட்சியில் சர்ச்சையை ஏற்படுத்திய சிலை விவகாரம் குறித்து, சமீபத்தில் கருத்து தெரிவித்த மாயாவதி, 'கன்சிராம் விருப்பப்படியே என் சிலைகள் வைக்கப்பட்டன.

இனிமேல், அது தேவையில்லை. மீண்டும் முதல்வரானால், வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்துவேன்' என்றார். ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையில், மீண்டும், மாயாவதிக்கு சிலை எழுப்பப்படுவது, அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக