செவ்வாய், 24 மே, 2016

570 கோடியில் ஜெயலலிதா+ அருண் ஜெட்லி +ராஜேஷ் லக்கானி + நரேந்திர மோடி.....இன்னும் யார் யார் சார் ?

Venkat Ramanujam's photo.Venkat Ramanujam
  செங்கப்பள்ளி, கண்டெய்னர் புறப்பட்டதாகச் சொல்லப்படும் கோவையிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது!லாரிகள் ஒரு மணிக்கு செங்கப்பள்ளி வருகின்றது என்றால், கோவையிலிருந்து அதிகபட்சம் நள்ளிரவு 12 மணிக்குப் புறப்பட்டிருக்கவேண்டும்!
Q2 .கோவையில் வங்கிப் பெட்டகம் நள்ளிரவு வரை திறந்திருக்குமா?
Q3. விடிந்தால் சனிக்கிழமை, அடுத்தநாள் ஞாயிறு, இரண்டு நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறை!
அப்படித் திறந்திருக்க ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறதா?
Q4. அந்தக் கண்டெய்னர்கள் எந்த நாளில் அந்தப் பணத்தை எந்த வங்கியில் கொண்டுபோய் ஒப்படைக்கும்? அதற்கும் ஆர் பி ஐ அனுமதி அளித்திருக்கிறதா?

Q5. வங்கியிலிருந்து பணம் எடுத்துச் செல்லவேண்டிய வாகனங்களுக்கு சில கட்டுப்பாடுகள், நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன! அதன்படி அந்த வண்டிகளில் GPS பொருத்தப்பட்டு கண்காணிக்கப் பட்டனவா?
Q6. அந்த பரிமாற்றத்துக்கான இன்ஸ்யூரன்ஸ் ஆவணங்கள் எங்கே?
Q7. இவ்வளவு பெரிய தொகை பரிமாற்றம் பற்றி நெறிமுறைகளின்படி உள்ளூர் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதா?
Q8 .வழியிலிருக்கும் டோல்கேட்டை த் தவிர்ப்பதற்காக அந்த வண்டிகள் மாற்றுப் பாதையில் சென்றதாக அறிவித்திருக்கிறார்கள்! அந்த மாற்றுப்பாதை, ஆள் நடமாட்டமற்ற வயல்வெளிகளிடையே சுமார் பத்து கிலோமீட்டர் வரை சுற்றிச் செல்ல வேண்டும்.
Q9. ஒரு பொதுத்துறை வங்கியின் ‪#‎570Cr‬ ரூபாயை எடுத்துச் செல்லும் வண்டிகள் ஒரு 350 ரூபாய் சுங்கவரி செலுத்தப் பயந்துகொண்டு ஆள் நடமாட்டமில்லாத பாதையில் செல்ல முடிவெடுத்தது எந்தவகையான சிக்கன நடவடிக்கை அல்லது முட்டாள்தனமான ரிஸ்க்?
Q10 .தேர்தல் அதிகாரிகளை அடையாளம் தெரியாமல் கொள்ளையர்கள் என்று நினைத்து நிற்காமல் விரைந்துபோனதாகச் சொல்லியிருக்கும் வண்டியின் பாதுகாவலர்களுக்கு சக போலீஸ்காரர்களை அடையாளம் தெரியவில்லை என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும், அவர்களின் ஆயுதங்களும் பயந்து பதுங்கிக்கொண்டனவா?
Q11. கொள்ளையர்களுக்கு பயந்து செல்பவர்கள் ஆள் நடமாட்டமில்லாத பாதையைத் தேர்ந்தெடுப்பார்களா, நடமாட்டம் மிக்க ஹைவேயைத் தேர்ந்தெடுப்பார்களா?
Q12. விதிமுறைப்படி GPS கண்காணிப்பில் இருக்கும் வாகனங்கள் மாற்றுப்பாதையை எந்த தைரியத்தில் தேர்ந்தெடுத்தன? அது எப்படி கண்காணிப்பில் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டது?
Q13. 14.5.2016 சனிக்கிழமை நள்ளிரவு ஒரு மணிக்கு செங்கப்பள்ளி அருகே மூன்று கண்டெய்னர்கள் பணத்துடன் பிடிபடுகின்றன! சரியாக 18 மணி நேரம் கழித்து ஸ்டேட் பேங்க் அது தங்கள் பணம் என்று சொந்தம் கொண்டாடுகிறது! அதற்கான சில ஆவணங்களையும் அது சமர்ப்பிக்கிறது! அந்த ஆவணத்திலிருக்கும் தேதி கன்டெய்னர் லாரியின் எண் உட்பட பல விஷயங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன! தகவல் பரிமாற்றத்துக்கு இவ்வளவு வழிமுறைகள் இருக்கும் காலகட்டத்தில் 18 மணிநேரம் எதற்காகத் தேவைப்பட்டது?ஆவணங்களைத் தயாரிக்கவா?
Q14.. ஒரு சாதாரண தனி மனிதன் 50000 ரூபாய் கொண்டுசெல்லவே முறையான ஆவணங்கள் தேவைப்படும் காலத்தில், மாநிலம் விட்டு மாநிலம் நள்ளிரவில் செல்லும் வங்கிப்பணம் ஆவணங்களே இல்லாமல் நள்ளிரவில் அனுப்பப்படுமா?
Q15. இத்தனை விதி மீறல்களோடு விடுமுறை நாளில் பணத்தை எடுத்துச் செல்ல அனுமதி அளித்ததற்கு எந்தப் புண்ணியவான் பொறுப்பேற்றுக்கொண்டார்?
Q16. இந்திய நிதி அமைச்சர் இதில் எல்லோருக்கும் முந்திக்கொண்டு துள்ளிக் குதிக்கும்போது, சம்பந்தப்பட்ட வங்கி, ஆர் பி ஐ உயர் அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை என்ன எடுத்திருக்கிறார்கள்?
Q17.. இந்த அப்பட்டமான விதிமீறல்களை மத்திய நிதி அமைச்சர் அங்கீகரிக்கிறாரா?
Q18.. ‪#‎570கோடி‬ ரூபாய்க்கு மூன்று கண்டெய்னர் தேவையா?
Q19. அப்படியானால் அதன் டினாமிநேஷன் அனுப்பிய பெட்டகத்தின் லெட்ஜர்களில் இருந்து கொடுக்கப்பட்டதா?
Q20. உள்ளூர் வங்கிகளுக்கு இடையே நடக்கும் பரிவர்த்தனையின்போதே சீல் செய்து அனுப்பப்படுகையில் இத்தனை கோடி வங்கிப்பணம் அனுப்பப்பட்ட வாகனங்கள் ஒரு சாதாரணப் பூட்டால்தான் பூட்டப்படுமா?
விடை கிடைக்குமா?
வெங்கட் ராமானுஜம்  முகநூல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக