புதன், 13 ஏப்ரல், 2016

WhatsApp வாட்சப் தடை ..? மோடியை பிரதமராக்கிய வாட்சைப், ட்வீட்டரை பார்த்து மோடி இப்போ பயப்படுகிறார்!

WhatsApp, presently legal, could soon get banned in India: Report
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளதால் வாட்ஸ் அப்பிற்கு தடை விதிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பெரும்பாலானோர் கையில் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அதில் வாட்ஸ்-அப் இருக்கிறது. தனிப்பட்ட முறை, குரூப் ஆகியவற்றின் மூலம் பல்வேறு தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உடனுக்குடன் பறிமாறப்பட்டு வருகிறது. அதேசமயம், வாட்ஸ்-அப் மூலம் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை, சில தொழில் நுட்பங்களை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதனால், யாராலும் கண்காணிக்க முடியாத ஒரு புதிய சேவையை வாட்ஸ்-அப் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.  வாட்சப்பில் நாந்தாய்ன் பேஸ்புக்கில் நாந்தாய்ன் டுவீட்டரில் நாந்தாய்ன் எல்லாத்துலையும் நான்தான் முதல் முதல் முதல்னு ஊளையிட்டாங்க இப்ப தோல்வி பயம் பிடிசுடிச்சுடோய்..... 
அதன் மூலம், வாட்ஸ்-அப் வழியாக பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை ஹேக்கர்கள் எதுவும் செய்யமுடியாது. எவராலும் அந்த தகவல்களை பார்க்க முடியாது. 256 பிட் கீ என்கிரிப்சன் முறையை பயன்படுத்தி அந்த வசதியை உருவாக்கியுள்ளது வாட்ஸ்-அப் நிறுவனம். பொதுவாக, இப்படி மிகவும் பாதுகாப்பான ஒரு வசதியை அறிமுகப்படுத்துவதற்கு முன், அந்த நாட்டு அரசின் அனுமதியை பெற வேண்டும். ஆனால், வாட்ஸ்-அப் நிறுவனம் இந்திய அரசிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்று தெரிகிறது. இந்த வசதியை தீவிரவாதிகள் பயன்படுத்தினால், அது இந்தியாவிற்கு பெரும் ஆபத்தாக முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. எனவே வாட்ஸ்-அப் பயன்பாட்டிற்கு இந்தியாவில் தடை கொண்டு வருவது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக