வியாழன், 21 ஏப்ரல், 2016

உத்தரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து..உயர் நீதிமன்றம் ! மோடி வித்தைக்கு குட்டு...Uttarakhand Verdict: Congress Says PM, Amit Shah Must Apologise

உத்தரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த ஹரீஷ் ராவத் தொடர்ந்த மனுவை விசாரித்த உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தால் வழிகாட்டப்பட்ட சட்டத்துக்கு மாறாக உத்தரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 29ம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. dinamani.com மோடியும் அமித்ஷாவும் தங்கள் சதுரங்க வேட்டையை  இனியாவது நிறுத்த வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக