வெள்ளி, 22 ஏப்ரல், 2016

பாஜகவின் தேர்தல் அறிக்கை : சமசீர் கல்வி கோவிந்தா ! நந்தன் பிறந்த நாளில் மட்டும் கோயில்களில் சமபந்தி விருந்து..... .

பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார். | படம்: பிஜாய் கோஷ் மதமாற்ற தடைச் சட்டம்: யோகாசனம் தியானம் ,கோவில்கள் தனியாரிடம் (ஆர்.எஸ்.எஸ்)  ஒப்படைக்கப்படும் .பூரண மதுவிலக்கு, தினமும் 20 லிட்டர் இலவச குடிநீர்,(ஒரு லிட்டர் கோமியம்)...பசுவதை தடை சட்டம் கொண்டு வரப்படும் (பசுவின் தோல் ஏற்றுமதி செய்யப்படும்) கோயில் நிலங்கள், இடங்களை பிற மதத்தினர் வாடகைக்கு, குத்தகைக்கு எடுத்திருந்தால் அதற்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். பாஜக தேர்தல் அறிக்கை
பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார். | படம்: பிஜாய் கோஷ்
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம், பசுவதை தடைச் சட்டமும் கொண்டு வரப்படும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக தொலைநோக்கு அறிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின்கட்கரி இன்று வெளியிட்டார்.  இவங்க இலவச வீபுதி சந்தானம் குங்குமம் நாமக்கட்ட்டி தவிர மத்ததெல்லாம் அறிவிச்சிருக்காங்க
தமிழக பாஜத தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேர்தல் அறிக்கை குழுத் தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பாஜக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
* தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
* வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை.
* ஒரு குவிண்டால் மஞ்சளுக்கு ரூ. 15 ஆயிரம், நெல்லுக்கு ரூ. 2 ஆயிரத்து 500, ஒரு டன் கரும்புக்கு ரூ. 4 ஆயிரத்து 500, ஒரு கிலோ கொப்பரை தேங்காய்க்கு ரூ. 75 வழங்கப்படும்.
* தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனுக்கான வட்டியை மாநில அரசே செலுத்தும்.
* உள்ளூர் நதிகள் இணைக்கப்பட்டு மாநில நீர்வழி போக்குவரத்து உண்டாக்கப்படும்.
* மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும்.
* பின்தங்கிய மற்றும் தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க வரிச்சலுகைகள் வழங்கப்படும்.
* மக்களின் சொந்த முயற்சியில் உருவான தொழில் மற்றும் வியாபார மையங்களுக்கு தனி துறை.
* தொழில்கள் தொடங்க ஒற்றைச்சாளர முறையில் 30 நாள்களில் அனுமதி.
* மின் துறையை சீரமைக்க மத்திய அரசின் உதய் மின்திட்டம் அமலாக்கப்படும்.
* 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம். சூரிய மின் தயாரிப்புக்கு 50 சதவீத மானியம். விவசாய பம்ப்செட்டுக்கு 3 மாதத்தில் மின் இணைப்பு.
* தமிழகத்தில் லோக்ஆயுக்தா அமைப்பு கொண்டுவரப்படும்.
* அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ-க்கு இணையான பாடத் திட்டம்.
* கல்வி நிறுவனங்கள் நடத்த அனைவருக்கும் சம உரிமை.
* 6-ம் வகுப்பு முதல் யோகாசனம், தியானம் கற்றுத்தரப்படும்.
* ஆதிதிராவிடர் நலத்துறை பட்டியலின மக்கள் நலத்துறையாக மாற்றப்படும்.
* சுவாமி சகஜானந்தரின் பிறந்த நாள் தாழ்த்தப்பட்டோர் உரிமை காக்கும் நாளாக கடைப்பிடிக்கப்படும். அருந்ததியர் நல வாரியம் அமைக்கப்படும்.
* அடுத்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.
* ஆழ்கடல் மீன்பிடிப்பு ஊக்குவிக்கப்படும். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும். மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்கப்படும்.
* பெண் குழந்தைகளுக்கு 12-ம் வகுப்பு முடிக்கும் வரை ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் ஊக்கத் தொகை வழங்கப்படும்.
* 24 மணிநேரமும் இயங்கும் பெண்கள் நல மையங்கள் அமைக்கப்படும்.
* குடும்பத்துக்கு தினமும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இலவசமாக வழங்கப்படும்.
* அனைத்து மாநில நெடுஞ்சாலைகளும் 4 வழிச் சாலைகளாக மாற்றப்படும்.
* கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் கொண்டு வரப்படும்.
* கோயில்களில் கட்டண தரிசன முறை ஒழிக்கப்படும்.
* நந்தனார் பிறந்த நாளில் கோயில்களில் சமபந்தி விருந்து நடத்தப்படும்.
* கோயில்கள் அரசிடம் இருந்து விடுவிக்கப்பட்ட தனி வாரியத்திடம் ஒப்படைக்கப்படும்.
* ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்படும்.
* பாரம்பரிய பசு இனங்கள் பாதுகாக்கப்படும். பசுவதை தடைச் சட்டம் கொண்டு வரப்படும்.
* பயங்கரவாதத்தை ஒழிக்க தனிச் சட்டம்.
* கோயில் நிலங்கள், இடங்களை பிற மதத்தினர் வாடகைக்கு, குத்தகைக்கு எடுத்திருந்தால் அதற்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.
* வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க தனி அமைப்பு
* மாவட்டந்தோறும் பல்நோக்கு இலவச மருத்துவமனை, தாலுகாக்கள் தோறும் இலவச முழுஉடல் பரிசோதனை மையங்கள்.
இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக