செவ்வாய், 12 ஏப்ரல், 2016

இந்தியாவின் முன்னனி பெண் பைக் ரேஸர் வேணு பாலிவால் சாலை விபத்தில் மரணம்

venu-paliwal_647_041216103758  சாலை விபத்தில் பலியானார் இந்தியாவின் “நம்பர் 1” பெண் பைக் ரேஸர் வேணு பலிவால்! venu paliwal 647 041216103758போபால்: இந்தியாவின் முன்னணி பெண் பைக் ரேஸரான வேணு பலிவால் மத்திய பிரதேசத்தில் சாலை விபத்தொன்றில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரசேத மாநிலம் விதிஸா மாவட்டத்தில் உள்ள கையாராஸ்பூரில் வேணு பாலிவால் தனது ஹார்லி டேவிட்சன் பைக்கில் வேகமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த அவர், சாலையில் கவிழ்ந்து விழுந்தார்.


இதில் பலத்த காயமடைந்த வேணு, அருகே இருந்த கையாராஸ்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் விதிஸா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்தியாவின் முன்னணி பைக் ரேஸ் வீராங்கனையான  வேணு ஜெய்பூரைச் சேர்ந்தவர், தனது ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 13012821_10154135905515798_553686974820452789_n  சாலை விபத்தில் பலியானார் இந்தியாவின் “நம்பர் 1” பெண் பைக் ரேஸர் வேணு பலிவால்! 13012821 10154135905515798 553686974820452789 n
இச்சம்பவம் பைக் ரேஸ் ரசிகர்களிடையே பெரும் சோகத்தினையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  புதியதலைமுறை.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக