வியாழன், 21 ஏப்ரல், 2016

இந்தப் பேச்சுக்கு என் மீது கொலைவெறியோடு இருக்கிறது இந்துத்துவ இலக்கியக் கும்பல்


மதிமாறன் :இந்தக் கோட்டத் தாண்டி நானும் வரமாட்டேன். நீயும் வரக்கூடாது’ என்கிற பாணியில் ஒரு குரூப் என்னைக் கண்டித்து எழுதி வருகிறது.
அன்று நான் பேசிய பிறகு பேசியவர்கள் யாரும் எனக்கு மறுப்பு சொல்லவிலை. என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்கவும் இல்லை. லைட் எல்லாம் ஆப் பண்ணி, மனுஷ்யபுத்திரன் போகும் வரை அங்கே தான் இருந்தேன்.
ஆனால், அங்கு என்னிடம் பேசுவதற்குக் கூட முயற்சிக்காதவர்கள், facebook ல் கோடு கிழித்துச் சவடால் பேசுகிறார்கள் வடிவேல் பாணியில்.
அன்று நான் கொஞ்சம் அவசரமாகப் பேசியதால் என் இயல்பிலிருந்து கொஞ்சம் விலகிதான் பேசினேன். காரணம், தோழர் சண்முகசுந்தரம், ‘நிறங்களின் நிஜம்’ புத்தகத்தில், ராமாயணம், இந்து மதம், பார்ப்பனியம், ராஜராஜசோழன், சி.பி.எம்., கீழ்வெண்மணி என்று பல செய்திகளைச் சொல்லியிருந்தார்.
எனக்கு ஒதுக்கப்பட்ட 15 நிமிடங்களில் இவ்வளவையும் பருந்து பார்வையில் விடுபடாமல் சொல்லிவிட வேண்டும் என்ற எண்ணம் சின்னப் பதட்டத்தைக் கொடுத்தது.
புத்தகத்தில், ‘பிராமணியம்’ என்றே பயன்படுத்தியிருந்தார். பிராமணர் என்பது ஜாதியல்ல. வர்ணம். நான்கு வர்ணத்தில் இன்றும் இருப்பது பிராமணர் வர்ணம் தான். பிராமணர் என்றால், அடுத்தவர்களைச் சூத்திரர் என்று இழிவு படுத்துவதாகும்.
அதனால் பார்ப்பனர் என்று தான் குறிக்க வேணடும். அது மரியாதைக்குறைவான சொல்லல்ல. பாரதியே பயன்படுத்தியிருக்கிறார்..’ என்றேன். அந்தப் பகுதியை இந்த வீடியோவிலிருந்து விலக்கி இருக்கிறார்கள்.
பரவாயில்லை. தம்பி Kiru Karikalan என்னைக் கண்டித்து எழுதியவர்களைப் பார்த்து கேட்டார். ‘அங்கு அமைதியாக இருந்து விட்டு facebook ல் எழுதுவது கழிவறையில் எழுதுவதைப் போல்’ என்று.
எதுக்கும் அடுத்தமுறை கவிக்கோ அரங்கத்திற்குப் போனால், முதலில் கழிவறையைத் தான் போய்ப் பார்க்கனும். என்னைத் திட்டி கக்கூஸ்ல எதவாது எழுதி வைச்சிருக்காங்கல என்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக