புதன், 6 ஏப்ரல், 2016

வேல்முருகன்: நம்ப வைத்து ஏமாற்றிவிட்டனர்.... ஜெயலலிதா ஏமாற்றி விட்டார் என்று சொல்ல இன்னும் திராணியில்லை

அதிமுக கூட்டணியியில் தொகுதிகள் ஒதுக்குவது குறித்து நடந்தது என்ன என்று வேல்முருகன் விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களிடம் அதிமுக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தொகுதிகள் ஒதுக்குவது குறித்து ஜெலலிதாவை சந்தித்துப் பேசுகங்கள் என்றார்கள். சந்தித்தேன். கடிதம் கொடுக்க சொன்னார்கள். கடிதம் கொடுத்தேன். முதலில் 11 தொகுதி கேட்டேன் பின்பு, 9 தொகுதி அப்புறம் 6 தொகுதிகள் கடைசியாக, தமிழகத்தில் 5 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என கேட்டேன். கேட்ட தொகுதிகள் ஒதுக்கவில்லை. அதிமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சியிலும் நான் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
அதிமுக தலைமையிடம் பேசிக்கொண்டே, வேறு தலைமையிடம் பேசிக்கொண்டிருந்தால் எனக்கு மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கும். நான் அப்படி செய்யவில்லை. அதிமுக எங்களை நம்பைவத்து கடைசியில் அனுப்பிவிட்டனர். பரவாயில்லை. அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம். விரைவில் கட்சியினருடன் கலந்து பேசி அடுத்தகட்ட முடிவை எடுப்பேன் என்றார்.வெப்துனியா.கம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக