திங்கள், 4 ஏப்ரல், 2016

தமாகா...கொடுக்கும் தொகுதியை வாங்கிக் கொண்டு அதிமுக கூட்டணியில்...விரைவில் ஜெ.வுடன் சந்திப்பு?

கேட்டதைவிட குறைவான தொகுதி களை தந்தாலும் பரவாயில்லை, அதிமுகவுடனே கூட்டணி அமைப்பது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் முடிவு செய்துவிட்டார். ஓரிரு நாளிள் ஜெயலலிதாவை அவர் சந்திப்பார் என்று தெரிகிறது.
அதிமுகவுடன் தமாகா கூட்டணி அமைக்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகின. சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் மாவட் டத்துக்கு ஒரு தொகுதி என்றும் தமாகா கோரிக்கை விடுத்ததால், அதிமுக வுடன் பேச்சுவார்த்தை தொடங்கு வதில் இழுபறி நிலை நீடித்தது.
இந்நிலையில், அதிமுக - தமாகா இடையே நடந்த ரகசிய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள் ளதாகவும் ஜெயலலிதாவை ஜி.கே.வாசன் ஓரிரு நாளில் சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தமாகா மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, ‘‘ஆரம்பத்தில் 35 தொகுதிகள் வரை அதிமுகவிடம் எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கு அவர்கள் சம்மதிக்க வில்லை. எனினும், தொடர்ந்து பேசி வந்தோம். காங்கிரஸ் கட்சிக்கு திமுக முன்னுரிமை அளித்ததால், அந்தக் கூட்டணியில் இணைவதில் ஜி.கே.வாசனுக்கு துளியும் விருப்பமில்லை. அப்படியே இணைந்தாலும், காங்கிரஸ் காரர்கள் ஒத்துழைப்பு தரமாட்டார்கள் என்பதால் திமுகவுடன் இணையும் எண்ணமே வாசனுக்கு இல்லை.
தேமுதிக - ம.ந.கூட்டணி தரப் பிலும் 30 தொகுதிகள் வரை தமாகாவுக்கு கொடுப்பதற்கு தயாராகவே இருந் தனர். ஆனால், அக்கூட்டணிக்கு சென்றால், வெற்றி வாய்ப்பு சந்தேகத்துக்குரிய விஷயமாகவே இருக்கும் என்று நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தச்சூழலில், அதி முக மூத்த அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் 16 இடங்களை தருவதாக கூறினர். தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தென் னந்தோப்பு சின்னத்தில் போட்டி யிடுவது தொடர்பாக பேசப்பட்டது.
அதிமுகவுடன் இணைந்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதால், குறைவான தொகுதி களாக இருந்தாலும் அவற்றை பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு ஜி.கே.வாசன் வந்துவிட்டார். ஓரிரு நாளில் முதல்வரை ஜி.கே.வாசன் சந்தித்துவிடுவார். இதுபற்றி பிற மாவட்டங்களில் உள்ள மூத்த தலை வர்களுடன் ஆலோசிப்பதற்காக அவர் களை வாசன் சென்னை வரச் சொல்லியுள்ளார். இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக