திங்கள், 4 ஏப்ரல், 2016

தமிழக கோவில்களில் ஆடைகட்டுப்பாடு ரத்து...உயர்நீதி மன்றம் ஆணை

தமிழகத்திலுள்ள கோயில்களில் நுழைய பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட ஆடை கட்டுப்பாட்டை ஹைகோர்ட் ரத்து செய்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களுக்குள் செல்வோருக்கு, ஆடை கட்டுப்பாடு விதித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி உத்தரவிட்டது. Dress code in Temple: Madras High Court Bench on Monday dismissed an order passed by a single judge அதை தொடர்ந்து, ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு முதல், தமிழகத்தில் உள்ள, 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில், ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளை, இந்து சமய அறநிலையத்துறை அமல்படுத்தியது. இதையடுத்து, கோவில்கள் முன், ஆடை கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அரசு சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், ரவிச்சந்திரபாபு ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்து வந்தது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இந்த பெஞ்ச் இன்று ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. எனவே இனிமேல் ஆண்கள், பெண்கள் வேட்டி, சேலை கட்டிக் கொண்டு கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பது கட்டாயம் இல்லை

Read more at: ://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக