புதன், 20 ஏப்ரல், 2016

குஷ்பூ: ஜெயலலிதாவுக்கு மக்களின் உயிரின் மீது மரியாதையை இல்லை....இரங்கல் கூட தெரிவிக்காதவர்.

சென்னை: யாருடைய உயிர் மீதும் ஜெயலலிதாவுக்கு அக்கறை இல்லை என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கூறியுள்ளார்.தி.மு.க தலைவர் கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத்தில் இன்று (20-ம் தேதி) குஷ்பு சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மரியாதை நிமித்தமாக திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தேன். ஜெயலலிதா பிரசாரத்தின்போது பலர் உயிரிழந்து வருகின்றனர். யாருடைய உயிர் மீதும் ஜெயலலிதாவுக்கு அக்கறை இல்லை, இறந்தவர்களுக்கு இரங்கல்கூட தெரிவிக்கவில்லை. ஹெலிகாப்டரிலேயே மக்களை சந்தித்து வந்தால் மக்களின் குறைகள் எப்படி தெரியும்?
அடுத்து ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என சொல்லும் ஜெயலலிதா, கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது மதுவிலக்கை ஏன் கொண்டுவரவில்லை. தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை அ.தி.மு.க. நிறைவேற்றவில்லை

எஞ்சியுள்ள 8 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும். கட்சி தலைமை எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் அங்கு போட்டியிடுவேன்'' என்றார்.விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக