செவ்வாய், 5 ஏப்ரல், 2016

உடையும் நிலையில் வாசன், சரத்குமார் கட்சிகள்.....

காங்கிரசுக்கு மீண்டும் திரும்ப போவதாக, 13 நிர்வாகிகள் கூறியுள்ளதால், வாசனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதே போல, சரத்குமார் கட்சியும் மீண்டும் உடையும் அபாயத்தில் உள்ளது.
அ.தி.மு.க., கூட்டணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த த.மா.கா.,விற்கு, கதவடைக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேசிக் கொண்டே, தி.மு.க., மற்றும் மக்கள் நலக் கூட்டணியுடன் ரகசிய பேச்சு நடத்தியதுதான், இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.தி.மு.க., கூட்டணியில், த.மா.கா.,வை சேர்க்கக் கூடாது என்று, காங்., தரப்பில் கறாராக தெரிவிக்கப்பட்டதைதொடர்ந்து, த.மா.கா.,வை கூட்டணிக்கு இழுக்கும் முடிவை, தி.மு.க., கைவிட்டது.  சும்மா இருந்தாலும் சுயநலமில்லாட்டி நலமாக இருக்கலாம் ஆனா அளவுக்கு மீறி சுயநலத்தோடு இருந்தா வாசன் சரத்து கதை ஒரு பாடமாக இருக்கட்டும்
தற்போது, த.மா.கா.,விற்கு உள்ள ஒரே வாய்ப்பு, ம.ந.கூ., மட்டுமே. ஆனால், தங்களுக்கு ஒதுக்கிய, 124 தொகுதிகளில், ஒரு தொகுதியை கூட விட்டுக் கொடுக்க முடியாதுஎன்று, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறிவிட்டதை தொடர்ந்து, அங்கும் செல்ல வாய்ப்பில்லை.ஒருவேளை, வாய்ப்பை ஏற்படுத்தி, த.மா.கா., தே.மு.தி.க., - மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தால், மீண்டும் காங்கிரசுக்கு செல்ல, த.மா.கா., முக்கிய நிர்வாகிகள், 13 பேர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதை, அவர்கள் வாசனிடமும் தெரிவித்ததால், அவர் கடும் நெருக்கடியில் தவிப்பதாக, கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

சரத்குமார் மீது அதிருப்தி:'
காமராஜர் கொள்கைகளைமுன்நிறுத்தி, சமத்துவ மக்கள் கட்சி துவங்கிய சரத்குமார், ஒரு சீட்டுக்காக, அ.தி.மு.க.,வில் முடங்கியதோடு, காமராஜர் கொள்கைகளுக்கு விரோதகமாக செயல்படும், அ.தி.மு.க.,வை தொடர்ந்து ஆதரிக்கக் கூடாது. அக்கட்சி கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்' என, சமத்துவ மக்கள் கட்சியினர், அக்கட்சி தலைவர் சரத்குமாரை வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக, தென் மாவட்டங்களில் இருந்து, நுாறு வாகனங்களில், சென்னை வரும் கட்சி நிர்வாகிகள், சரத்குமார் வீட்டை முற்றுகையிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலில் சொற்ப எண்ணிக்கையில், நாடார் சமுதாயத்தினர் இடம் பெற்றுள்ளதையும் மேற்கோள் காட்டி, சரத்குமாருக்கு, கட்சியினர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
- -நமது சிறப்பு நிருபர் --dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக