செவ்வாய், 5 ஏப்ரல், 2016

வருத்தப்படுகிறார் வைகோ ! வாசன், வேல்முருகன் அதிமுகவால் கைவிடப்பட்டதால்....அதிமுகவின் பி டீம் பேச்சாளர் அல்லவா?

வருத்தப்படுகிறேன்.(இருக்காதா பின்னே?) என்னால் கருத்து கூற முடியாது: வைகோ பேட்டி தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும், த.மா.கா. மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை கூட்டணியில் இணைப்பது குறித்து தன்னால் தனித்து எந்த கருத்தும் கூற முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, அதிமுக கூட்டணியில் வாசன், வேல்முருகன் ஆகியோருக்கு இடம் அளிக்கப்படாததற்கு வருந்துவதாக தெரிவித்துள்ளார். மேலும், இன்றைய சூழலில் அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்று தெரியாது. மற்றப்படி நானாக எதையும் சொல்ல முடியாது. தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும், நானாக எந்த கருத்தையும் தற்போது கூற முடியாது என்றார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக