வெள்ளி, 8 ஏப்ரல், 2016

ம.ம.கட்சி இராமநாதபுரம், ஆம்பூர், நாகப்பட்டினம், தொண்டாமுத்தூர், உளுந்தூர்பேட்டை தொகுதிகளில் திமுக கூட்டணில்

ம.ம.க. போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இணைந்துள்ளது. இதில் அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இரு கட்சிகளின் தொகுதி உடன்பாடு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மனித நேய மக்கள் கட்சி இராமநாதபுரம், ஆம்பூர், நாகப்பட்டினம், தொண்டாமுத்தூர், உளுந்தூர்பேட்டை ஆகிய தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. ராமநாதபுரம், ஆம்பூர் ஆகிய தொகுதிகள் மனித நேய மக்கள் கட்சி வசம் உள்ளன. naakkeeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக