ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

உம்பளாச்சேரி இன நாட்டுமாடு பாதுகாவலர்கள் முகநூல் குழு‬

உலகின் அனைத்து நாட்டு கால்நடைகளுடன் ஒப்பிடும் போது நமது இந்தியாவின் திமில் உள்ள பசு இனங்களே நஞ்சில்லாத ஆயுர்வேத மருந்துகளுக்கு ஈடான சத்தான பாலையும்,நமது மண்ணிற்றக்கு வளம் சேர்க்கும் கோடிக்கனக்கான நன்மை பயக்கும நுண்ணுயிர்களையும் தனது சாணத்தின் மூலமும் கோமியத்தின் மூலமும் தருகிறது.அது போக நாடு முழுவதும் நமது எருதுகளின் மூலம் நாம் பெறும் வேலையின் அளவு பல ஆயிரம் மெகாவாட் (குதிரைதிறன்) கொண்ட எந்திரங்களுக்கு இணையாக இருக்கிறது இதை பெட்ரோலியம் மற்றும் மின்சக்திக்கு மாற்று ஆற்றலாக எடுத்து கொண்டால் நமது நாட்டின் அந்நிய செலாவானியை பல ஆயிரம் கோடி மிச்சபடுத்துகிறது என்றே கொள்ளலாம்.
ஆனாலும் இதன் அருமை தெரியாத நம் நாட்டு மக்களிடமிருந்து நம் பாரம்பர்ய இன கால்நடைகள் நம் மண்ணை விட்டு படிப்படியாக மறைந்து வருவது யாராலும் மறுக்க முடியாத உண்மை.இதற்கு காரணம் நாட்டு மாடுகளை பற்றி நம் மக்களிடம் உள்ள விழிப்புணர்வின்மையும்,அறியாமையுமேயாகும்.எனவே வயதளவிலும்,மனதளவிலும் ஊக்கத்துடனும்,இளமையுடனும் இருக்கும் இளைய சமுதாயமாகிய நாம் நம்மை சார்ந்த சமூகத்திற்க்கும் அதிலும் குறிப்பாக விவசாயத்தையும்,கால்நடைகளையும் உயிராக மதிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.சமீபகாலமாக நமமுடைய ஒவ்வொரு உள்நாட்டு இனக்கால்நடைகளுக்கும் அவற்றை சார்ந்த விளையாட்டுகளுக்கும் சங்கங்கள் மற்றும் சமூக வலைதலங்களில் குழுக்கள் ஏற்படுத்தபட்டு அவற்றின் மூலம் அவ்வின மாடுகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது . இதில் தொண்டைநாட்டு மாடுகளை வளர்ப்போர் மற்றும் வளர்க்க விரும்புவேரை ஒருங்கினைக்க முடிவு செய்யபட்டுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த அண்ணண் நீலகண்டன் அவர்களின் கடினமான முயற்சி மற்றும் இடைவிடாத தேடுதலின் பலனாக இனத்தூய்மை உள்ள தொண்டை நாட்டுமாடுகளின் இருப்பு கண்டறியப்பட்டுள்ளது.இவ்வின மாடுகள் வேலூர்,திருவண்ணாமலை அதன் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளால் வீடுகளில் வளர்க்கபட்டு வருகிறது.இவ்வின பசுக்களின் அருமை தெரியாத விவசாயிகளிடமிருந்து மாடுகள் தமிழக மற்றும் கேரள கசாப்பு கடைகாரர்களின் கைகளுக்கு சென்றுவிடுவதான் பரிதாபம்.தொண்டை மண்டல மாவட்டஙகளான திருவண்ணாமலை,வேலூர்,திருவள்ளூர் மற்றும் செங்கற்பட்டு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பாரம்பர்ய இனக்கால்நடை வளர்ப்போர் இவ்வின மாடுகளைதான் தேர்வு செய்து வளர்க்க வேண்டும் இதுதான் உங்கள் மண்ணிற்க்கு ஏற்ற சரியான இனம்.இவ்வின பசுக்களை வாங்கி வளர்க்க விரும்பும் நண்பர்கள் உங்கள பகுதிக்கு அருகில் இதே இன பொலிகாளையின் இருப்பை உறுதி செய்யுங்கள்.காளை இல்லாத பட்சத்தில் நீங்களே பொலிகாளையை வளர்த்தெடுங்கள் தேவையில்லாமல் பசுக்களை வாங்கி பின்னர் இதே இன காளை கிடைக்காமல் வேறு இனக்காளைக்கோ அல்லது ஜெர்சி ஊசியின் மூலமோ கரூவூட்டம் செய்து இனத்தூய்மையை கெடுக்க வேண்டாம்.இவ்வின கால்நடைகளை வாங்க விரும்பும் மேற்கூறிய மாவட்டங்களை சேர்ந்த நண்பர்கள் நீலகண்டன் அண்ணண் அவர்களுடன் வாட்சப்குழு மூலம் தொடர்பை ஏற்படுத்தி கெள்ளவும் பின் அனைவரும் ஒன்றினைந்து திட்டமிட்டு ஒரே நாளில் இவ்வின மாடுகள் கிடைக்கும் கிராமங்களுக்கு சென்று மாடுகளை இடைதரகர்கள்,வியாபாரிகளின் குறுக்கீடு இல்லாமல் வாங்கி வரலாம்.மாடுகளை வாங்கிய பின்னரும் அனைவரும் தொடர்பில் இருப்பதை கைவிடக்கூடாது இதன் மூலம் தங்களுக்குள் நீங்கள் உங்கள் மாடுகளை பற்றிய தகவல்களை பரிமாற்றம் செய்யவும் பொலிகாளைகளின் இருப்பை தெரிந்தும் கொள்ளலாம்.வேகமாக அழிந்து வரும் தொண்டைநாட்டு மாட்டினத்தை காக்க தொடங்கபட்ட முதல் முயற்சி இது. தொண்டை நாட்டுமாடுகளை வளர்க்கும் மற்றும் வளர்க்க விரும்பும் மேற்கூறிய மாவட்டத்தை சார்ந்த நண்பரகள் மட்டும் கீழே கொடுக்கபட்டுள்ள வாட்சப் எண்ணிற்க்கு தங்கள் பெயர்,ஊர்,மாவட்டம் ஆகியவற்றை அனுப்பவும்.
நீலகண்டன்.+9500325143
படங்கள் உதவி: அண்ணண் Neela Gandan
தொகுப்பு: உம்பளாச்சேரி_இன_நாட்டுமாடு_பாதுகாவலர்கள்_முகநூல்_குழு‬

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக