ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

நீதிபதி மகேந்திரபூபதி ! கிரானைட் தீர்ப்பு தந்த தங்க பூபதி சாதிப் பூபதியாம்

தமிழகத்தையே உலுக்கிய கிரானைட் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பி. ஆர். பழனிச்சாமியை இரண்டு வழக்கிலிருந்து விடுதலைச் செய்ததுடன், வழக்கு தொடர்ந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் மேலூர் மாவட்ட நீதிபதி மகேந்திரபூபதி.
இந்நிலையில் நீதிபதி மகேந்திரபூபதி, சாதி பார்த்து தீர்ப்பு வழங்குபவர் என  விடுதலைச்சிறுத்தைகள் துணைச்செயலாளர் வன்னியரசு குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "அடிக்கடி நீதிமன்றத்துக்கு குடிபோதையில் வருவது, வழக்குகளை விசாரிக்கும்போது நீதிமன்றத்திலேயே குற்றம்சாட்டப்பட்டவரின் சாதி என்னவென்று கேட்பது, குற்றம் சாட்டப்பட்டவர் தலித்தாக இருந்தால் அவரை அங்கேயே அவதூறாக பேசுவது, தலித்துகளின் வழக்குகளில் அவர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவது என மதுரை வட்டாரத்தை சேர்ந்தவர்கள் பட்டியலிடுகிறார்கள்.
இப்போது தன்னுடைய சாதியை சேர்ந்த பி.ஆர்.பழனிச்சாமியை காப்பாற்றுவதற்கு நீதியை நரபலி கொடுத்திருக்கிறார் நீதிபதி மகேந்திரபூபதி.

தன் சாதியை சார்ந்த எளிய உழைக்கும் மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பக்கம் நின்று நீதியை வழங்காமல் இந்த பெருமுதலாளியின் பக்கம் நிற்பதிலேயே இது என்ன மாதிரியான சாதி பற்று என்னும் கேள்வி எழுகிறது. சாதி என்பது எப்போதும் உழைக்கும் மக்களுக்கு எதிரானது, அவர்களை கூறு போட்டு பிரித்து வைப்பது என்ற புரட்சியாளர் அம்பேத்கரின் கூற்று தான் விடையாக தெரிகிறது" என்று கூறியுள்ளார்.

படம்: சே.சின்னதுரை   விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக