ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

அதிமுக பி டீமின் அதிகாரபூர்வ பேச்சாளர் வைகோ: திமுகதான் பேரம் பேசியது, விஜயகாந்த் பேரம் பேசவில்லை...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேரம் பேசவில்லை. கொடுப்பதற்கு திமுக முன் வந்தது " என்று எனக்கு தெரியும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வைகோ இன்று அளித்த பேட்டியில், "விஜயகாந்த் ஊழல் செய்பவராக இருந்தால் இத்தனை கோடி பணம் பேரம் பேசப்பட்டது என்று அத்தனை பத்திரிகைகளிலும் எழுதப்பட்டிருக்கும். பணம் பேசப்பட்டது, தொகுதி கொடுப்போம் என்று சொல்லப்பட்டது. இது உண்மை. திரும்பவும் சொல்கிறேன், இன்னொரு கேஸ் போடட்டும். ஆனால் அதை நிராகரிக்க கூடிய துணிச்சல் இருக்கிறதே, அந்த நேர்மை அவரிடம் ( விஜயகாந்த்) இருக்கிறதே.< பேரம் அவர்கள் (தேமுதிக) பேசவில்லை. கொடுப்பதற்கு அவர்கள் (திமுக) முன் வந்தார்கள் என்று எனக்கு தெரியும். அந்த மாதிரியான ஆசாபாசங்களுக்கு அவர் (விஜயகாந்த்) இடம் கொடுக்கவில்லை. ஆகவே, இது திமுகவை தூக்கி பிடிக்க நினைக்கிறவர்களுடைய முயற்சி. நாங்கள் நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள், நாங்கள் யோக்கியர்கள். நாங்கள் நேர்மையானவர்கள்.ரொம்ப நல்லா தெரியுமே கொஞ்சம் "அந்த கடல்" பக்கம் போயி கேட்டு பாருங்க? உங்க நேர்மையை பற்றி காவியமே பாடுவாய்ங்க...உங்க பாவத்தை கழுவ எந்த கடல் நீரும் போதாது


இதுதான் சரி என்று முடிவெடித்து சேர்ந்திருக்கிறபோது, இப்படியொரு சூழல் தமிழக அரசியலில் 50 ஆண்டுகளில் ஏற்படவில்லையே என்கிறபோது, வாழ்த்தி வரவேற்கிறவர்கள் வரவேற்கிறார்கள் நல்ல உள்ளம் கொண்டவர்கள். ஆனால் நெஞ்சிலே நஞ்சை தேக்கி வைத்திருக்க கூடிய, எப்படியாவது கருணாநிதி கூட்டத்துக்கு பல்லக்கு தூக்க நினைப்பவர்களுக்கு, அண்ணன் கலைஞரை கொண்டு வர வேண்டும், மீண்டும் கொள்ளைக்கு துணை போக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த விமர்சனம் வருகிறது.

அவரை டேமேஜ் பண்ணுறதுக்கான முயற்சியில் திமுக வட்டாரமும், அண்ணா திமுக வட்டாரமும் பல வழிகளில் முயன்று கொண்டிருப்பதினால் நானும், திருமா அவர்களும் பீமா அர்ஜுனர்களாக இருந்து அவரை பாதுகாப்போம் என்று சொன்னேன். இதெல்லாம் வந்து ஒரு Literary-யா எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயம்" என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக