செவ்வாய், 19 ஏப்ரல், 2016

கனிமொழி: மதுபான ஆலைகள் மூடப்படும்....திமுக நிர்வாகிகளின் உறவினர்கள் தொடர்புடைய ஆலைகளும் மூடப்படும்


திமுக ஆட்சிக்கு வந்து மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதும், திமுக நிர்வாகிகளின் உறவினர்கள் நடத்தும் மதுபான ஆலைகள் மூடப்படும் என, திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். 

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவின் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா காப்பி அடித்து வருவதாகக் குற்றம் சாட்டினார். எதிர்கட்சி வேட்பாளர்களைப் பார்த்து பயந்து, அதன் காரணமாகவே அதிமுக தனது வேட்பாளர்களை தொடர்ந்து மாற்றி வருவதாகவும் அவர் விமர்சித்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடி விடுதலை செய்யப்பட்டிருப்பது, உண்மைக்கு கிடைத்த நீதி எனக்கூறிய கனிமொழி, பழிவாங்கும் நோக்கில் அதிமுகாவால் போடப்பட்ட பொய்வழக்கு இது என்பது தற்போது உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்தார். இதுபோல் இன்னும் பல வழக்குகளை அதிமுக போட்டுள்ளதாகவும், அவை அனைத்தையும் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் கனிமொழி தெரிவித்தார்.சேலம்: திமுக ஆட்சிக்கு வந்தால் மதுபான ஆலைகள் மூடப்படும் என்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சேலத்தில் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் சேலம் மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து வாக்கு சேகரித்தார்
அப்போது அவர் பேசுகையில், சொன்னதை செய்பவர்தான் திமுக தலைவர் கருணாநிதி. தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் நேரத்தில் மக்களைச் சந்தித்து வருகிறார். ஆனால், திமுக தலைவரோ மக்களுக்காக உழைக்கக் கூடியவர். அவர் உங்களைக் காண ஓடோடி வருபவர்.

அதேபோல, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மாவட்டம்தோறும் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் களைய நடவடிக்கை எடுத்து வருகிறார். மக்களைக் காண ஓடோடி வரும் தலைவர் வேண்டுமா அல்லது தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களைச் சந்திக்கும் தலைவர் வேண்டுமா என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு ஏதாவது செய்தாரா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆனால், திமுக ஆட்சியின் போது ரூ.7,000 கோடி கடன் ரத்து செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் 6,800 மதுக்கடைகள் திறந்ததுதான் சாதனையாக உள்ளது.
திமுக ஆட்சியில் ரூ.16,000 கோடியாக இருந்த மதுக்கடை வருவாய், அதிமுக ஆட்சியில் ரூ.36,000 கோடியாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் டாஸ்மாக் கடைகள் அதிகரித்துவிட்டதால், குடிக்கும் பழக்கமும் அதிகரித்துள்ளது. டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டுமெனில், திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் மதுபான ஆலைகள் மூடப்படும்.
தொழில் துறையில் தமிழகம் இந்திய அளவில் 20-ஆவது இடத்துக்கு சென்றுள்ளது. எனவே, அனைத்து துறைகளும் வளர்ச்சிபெற ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றார் கனிமொழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக