திங்கள், 11 ஏப்ரல், 2016

துவராக சங்கராசாரி : இனி கெட்டநேரம்தான்....பெண்களை கோவிலுக்கு அனுமதித்தது கூடாது....அட்ரா அட்ரா அட்ரா

துவாரகா சாரதா பீட சங்கராச்சார்யார் சுவாமி ஸ்வரூபானந்த் கூறுகையில், பெண்கள் சனிபகவான் கோயிலின் கருவறைக்குள் நுழைந்திருக்கக்கூடாது. இது அவர்களுக்கு கெட்டநேரம் வந்துவிட்டது. பெண்கள் கருவறைக்குள் நுழைந்ததால், இனிமேல் கற்பழிப்பு போன்ற குற்றச்செயல்கள் அதிகரிக்கும். சனி என்பது பாவங்களின் கோள். இங்கு வழிபடுவது பெண்களுக்கு எதிராக குற்றச்செயல்களை அதிகரிக்கும் எனக்கூறினார்.
ஹரித்வார்: மகாராஷ்டிரா மாநிலம் அஹமத்நகரில் உள்ள சனி பகவான் கோவிலில், பெண்கள் உள்ளே நுழைந்தது, கற்பழிப்பு போன்ற குற்றச்செயல்களை அதிகப்படுத்தும் என துவாரகா - சாரதா பீடத்தின் சங்கராச்சார்யா சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தில் அஹமத்நகர் மாவட்டத்தில் உள்ள சனி சிங்னாபூர் கோவில், பிரசித்தி பெற்றது. கோவிலின் உள்ளே, திறந்தவெளி பகுதியில் அமைந்துள்ள கருவறையில் நுழைய பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து பெண்கள் அமைப்பினர், 2015ல், போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 'கோவிலுக்குள் நுழைந்து, சாமி தரிசனம் செய்ய, ஆண்களை போல பெண்களுக்கும் சம உரிமை உண்டு.  சாமிகளுக்கும் காம லீலைகளுக்கும்    அழுத்தமான  தொடர்புகள்  வரலாறு  பூரா பரவி கிடக்கு......நம்ம ஊரு காஞ்சி  நித்தி பிரேமா முதல் வடநாட்டு  பாபாக்கள்  குருஜிக்கள் எல்லாரும் சதா  அந்த மயக்கத்தில் தான் உள்ளார்கள்  இவனுங்க கிட்ட தாய்குலம் கொஞ்சம்  விலகி நிற்பது நல்லதுதான்
இது பெண்களின் அடிப்படை உரிமை. இதனை, அரசு நிலை நாட்ட வேண்டும். பெண்களை தடுப்பவர்களை, அரசு கைது செய்ய வேண்டும்' என, ஐகோர்ட், ஏப்ரல் 1ல் உத்தரவிட்டது. இதனையடுத்து, ஏராளமான பெண்கள், அங்கு சென்று வழிபாடு நடத்தினர். காவலர்கள் யாரும் அவர்களை தடுக்கவில்லை. இதனைத்தொடர்ந்து, 'கோவிலுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என, கோவில் நிர்வாகம் அறிவித்தது. இதனால், பெண்கள் மகிழ்ச்சி பரவசத்துடன், பெருந்திரளாக, சனி பகவான் கோவிலுக்குள் சென்று வழிபட்டனர்.


இந்நிலையில் துவாரகா சாரதா பீட சங்கராச்சார்யார் சுவாமி ஸ்வரூபானந்த் கூறுகையில், பெண்கள் சனிபகவான் கோயிலின் கருவறைக்குள் நுழைந்திருக்கக்கூடாது. இது அவர்களுக்கு கெட்டநேரம் வந்துவிட்டது. பெண்கள் கருவறைக்குள் நுழைந்ததால், இனிமேல் கற்பழிப்பு போன்ற குற்றச்செயல்கள் அதிகரிக்கும். சனி என்பது பாவங்களின் கோள். இங்கு வழிபடுவது பெண்களுக்கு எதிராக குற்றச்செயல்களை அதிகரிக்கும் எனக்கூறினார்.
இதற்கு பல பெண் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளன.  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக