திங்கள், 18 ஏப்ரல், 2016

மக்களே உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் போட்டி

1. உளுந்தூர்பேட்டை-விஜயகாந்த்
2. விழுப்புரம்-வெங்கடேசன்
3. மன்னார்குடி-முருகையன் பாபு
4. திண்டிவனம்-உதயகுமார்
5. ரிஷிவந்தியம்-வின்செண்ட் ஜெயராஜ்
6. மேட்டூர்-பூபதி
7. ஒரத்தநாடு-ராமநாதன்
8. சங்கராபுரம்-கோவிந்தன்
9. உடுமலைப்பேட்டை-கணேஷ்குமார்
10. ஆத்தூர் (திண்டுக்கல்)-பாக்கியா செல்வராஜ்
11. விராலிமலை-கார்த்திகேயன்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் எந்த தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. தேமுதிக-மக்கள் நல கூட்டணியில் தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது.5-கட்டமாக தேமுதிக இதுவரை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பெயர் இடம்பெறாமல் இருந்தது. இதனால் அவர் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.இந்நிலையில் அவர் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. உளுந்தூர்பேட்டை தொகுதியானது, தேமுதிக-மக்கள் நல கூட்டணிக்கு செல்வாக்குமிக்க தொகுதியாக பார்க்கப்படுகிறது.
2006-இல் விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார்.
2011-இல் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டார்.
இந்நிலையில் அவர் 2016-இல் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக