செவ்வாய், 12 ஏப்ரல், 2016

போலீசார் அம்பேத்கர் படத்தை நொறுக்கி மாணவர்களை அடித்து இழுத்து கைது செய்தனர்....மதுரை சட்டகல்லூரியில்

அம்பேத்கர் புகைபடத்தை உடைத்து நொறுக்கி மாணவர்களை அடித்து இழுத்து கைது செய்த காவல்துறை! புரட்சியாளர் அம்பேத்கரின் 125 வது பிறந்தநாளை யொட்டி, மதுரை சட்டக்கல்லூரி முன்பு பெண்கள் உட்பட 70 மாணவர்கள் கூடி, புகைப்படம் வைத்து மாலை அணிவித்து வீரவணக்கக் கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் மாலை அணிவித்து உரையாற்றி துவங்கி வைத்தார். கூட்டம் முடிந்து அம்பேத்கர்-பெரியார் சிலைகளுக்கு மாலை அணிய செல்லும்போது, மாலை போட கூடாது, ஊர்வலம் போக கூடாது என்று கூறினர். பிறகு கைது செய்வதாக கூறி வற்புறுத்தினர். ஆனால் கைது குறித்த காரணத்தையே கூறவில்லை! பின் வலுக்கட்டாயமாக அடித்து இழுத்து அம்பேத்கர் புகைபடத்தை உடைத்து நொறுக்கி மாணவர்களை கைது செய்தது காவல்துறை! மதுரை ரிசர்வ்லைன் காவல்நிலையத்தில் 15 மாணவர்களை வைத்துள்ளது nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக